கேரளாவில் வசமாக சிக்கிய தமிழக ஆம்னி பஸ்கள்! கூடுதல் கட்டணம் கேட்கும்போது இனிச்சதா? காரணம் இதுதான்
சென்னை: சபரிமலை சீசன் தொடங்கிடுச்சி, கல்லா கட்டிடலாம் என கனவோடு கேரளாவுக்குள் என்ட்ரி ஆன, தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அபராதம் விதிக்கப்பட்டது? என்பது பற்றி காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பேருந்துகளில் மொத்தம் மூன்றே வகைகள்தான் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் போது அபராதம் விதிக்கப்படுகிறது. அதாவது,

1. அரசு பேருந்துகள்
2. தனியார் பேருந்துகள்
3. ஆம்னி பேருந்துகள்
அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
அரசு பேருந்துகளை பற்றி எல்லோருக்கும் தெரியும். குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும். நடுவில் உள்ள நிறுத்தங்களில் நின்று செல்லும். லாபமோ, நஷ்டமோ மக்களுக்கான சேவையை வழங்கும் நோக்கில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல தனியார் பேருந்துகளை பொறுத்த அளவில், அவைகளும் குறிப்பிட்ட வழித்தடங்களில அனுமதி வாங்கி, இருக்கைக்கு இவ்வளவு ரூபாய் டிக்கெட் என பேருந்துகளை இயக்குகின்றன. இந்த தனியார் பேருந்துகள் இயங்க Stage Carriages எனப்படும் அனுமதியை வாங்க வேண்டும்.
Stage Carriages எனில், பேருந்து சென்னையிலிருந்து வேலூர் வரை இயக்கப்படுகிறது. நடுவில் வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று மக்களை ஏற்றவும் இறக்கவும் அனுமதி பெறுவதைதான் Stage Carriages என்று சொல்கிறார்கள்.
ஆம்னி பஸ்கள்
ஆனால், ஆம்னி பேருந்துகள் இப்படி செயல்பட முடியாது. ஆம்னி பேருந்துகளின் நோக்கம் ஒப்பந்தம்தான். அதாவது ஒரு குழுவை ஏற்றிக்கொண்டு சபரிமலைக்கு போகிறது எனில், அதே குழுவுடன்தான் ரிட்டன் வர வேண்டும். வழியில் பத்தினம்திட்டாவில் நாலு பேர், கோயம்புத்தூரில் 8 பேர் என இறங்கி ஏற கூடாது. சிம்பிளாக சொல்வதெனில் ஆம்னி பேருந்துகள் இருக்கைகளுக்கு டிக்கெட் வைத்து பேருந்தை இயக்க கூடாது. இந்த பேருந்துகளுக்கு Stage Carriages கொடுக்கப்படாது. அதற்கு பதில் ஆல் இந்தியா பர்மிட் அல்லது ஒப்பந்த வாகனங்களுக்கான பர்மிட் மட்டுமே கொடுக்கப்படும். நம்மூரிலும் இதே சட்டம்தான்.
தமிழ்நாட்டை போலவே
ஆம்னி பேருந்துகள் இருக்கைகளுக்கு தனித்தனியாக டிக்கெட் வைத்து ஆட்களை அழைத்து செல்லக்கூடாது என கடந்த 2016ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்த அரசு பேருந்து நிலையம் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாறினாலும், நாங்கள் மாற மாட்டோம் என அடம் பிடித்த ஆம்னி பேருந்துகள், தீபாவளி, பொங்கல் என விடுமுறை நாட்களில் அநியாயத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் தற்போது கேரளாவில் வசமாக சிக்கியிருக்கின்றன.
வசமாக சிக்கிய ஆம்னி பஸ்கள்
அம்மாநில போக்குவரத்துறை, இந்த முறைகேட்டை கண்டுபிடித்து 30 தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்திருக்கிறது. ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.2 லட்சம் வரை அபராதம் விதித்திருக்கிறது. மொத்த அபராத தொகை ரூ.70 லட்சம். இதை பாரத்து அரண்டு போன தமிழக ஆம்னி பேருந்து சங்கம், இனி நாங்க கேரளாவுக்கு பஸ்ஸை விட மாட்டோம் என்று கூறியிருக்கின்றன.
தமிழக பேருந்துகளுக்கு கேரளா அபராதம் விதிப்பது சாதாரண விஷயம்தான். ஏனெனில் தமிழ்நாடு அரசும் கடந்த காலங்களில் கேரள பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு அபராதங்களை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications