வெளியானது ப்ளஸ்-2 தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல் ஸ்கோர் செய்த மாணவிகள்..! முழு தகவல்கள் இதோ..!
சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது. 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 83 விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவடைந்தது.
தொடர்ந்து மதிப்பெண் சரிபார்த்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் பார்த்துக் கொள்ளலாம், EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டுள்ள நிலையில், 94.56 சதவீத மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர்.. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications