பொறுத்தது போதும்..நாளை காலை வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்! இந்த இணைய தளங்களை நோட் பண்ணிக்கோங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகும் நிலையில், மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி பொதுத் தேர்வு தொடங்கியது. 22ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

Tamil Nadu plus 2 exam results will be released tomorrow

இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 83 விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவடைந்தது.

தொடர்ந்து மதிப்பெண் சரிபார்த்தல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை அதாவது மே 6ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

தேர்வு முடிவுகளை மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம், EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+