+2 Exam: இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு.. தமிழ்நாடு முழுக்க 8.27 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு 2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3,412 மையங்களில் 8 லட்சம் மாணவ, மாணவிகள், 27,783 தனித் தேர்வர்கள், 281 கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 250 மையங்களில் 67,516 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு
முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழித்தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன. +2 பொதுத் தேர்வு காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். கண்காணிப்பு பணியில் 44,624 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான முழுமையான ஏற்பாடுகளைப் பள்ளிக் கல்வித்துறை செய்து முடித்துள்ளது. தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பறக்கும் படைகள்
காப்பி அடித்தல், பிட் அடித்தல் போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, 4,540 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கூடத்துக்குள் செல்போன், மின்சாதனப் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "உயர் கல்வியே எங்கள் இலக்கு என்ற உறுதியோடு ஆண்டு முழுவதும் ஊக்கத்தோடு படித்து, உங்கள் குறிக்கோளின் நுழைவுவாயிலான மேல்நிலை பொதுத் தேர்வை எழுத உள்ளீர்கள். கருத்தாய் படித்து கல்விக் கடமையாற்றி அதன் பலன் கனியும் காலமிது. ''என்னால் முடியும்'' என்னும் மந்திரச் சொல்லை மனதில் பதியுங்கள். அறிவில் தெளிவும், மனதில் துணிவும், செயலில் உறுதியும் இருந்தால் தேர்வு பற்றிய அச்சம் தேவைஇல்லை. தேர்வுகளை முனைப்புடன், முழு கவனத்துடன் எழுதுங்கள்.
இந்த காலத்தில் உங்கள் உடல்நலன், மனநலனும் மிக அவசியம். சத்தான உணவு, போதுமான தூக்கம், மன அமைதி ஆகியவை தேர்வுகளை எதிர்கொள்ளத் துணைநிற்கும். பதற்றமின்றி, நம்பிக்கை, மகிழ்ச்சியோடு தேர்வை அணுகுங்கள். உழைப்புக்கு ஏற்ற பலனை நிச்சயம் அடைவீர்கள்.
உங்கள் உயர் கல்வி இலக்கை அடைய, புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மனவலிமை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை வெற்றிப் பாதைக்கான படிக்கட்டுகள். தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். அனைவரும் சிறப்பான வெற்றி பெற என் உளப்பூர்வமான வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "மாணவர்கள் பயமோ, பதற்றமோ இன்றி நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் தேர்வு அறைக்கு செல்லுங்கள். தேர்வில் தேர்ச்சி அல்லது அதிக மதிப்பெண் பெற முடியாவிட்டால் முடங்கிவிடாதீர்கள். அடுத்த வாய்ப்புகளில் அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை, மன உறுதியுடன் இருங்கள்." எனக் கூறியுள்ளார்.
அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்று, சாதனை படைக்க விரும்புகிறேன். மாணவர்கள் பதற்றம், பரபரப்பு இல்லாமல் கவனமாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications