அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த போலீசார்.. பாஜக தலைவர் ஜேபி நட்டா கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
சென்னை: சென்னையில் வருகிற 11 ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்வார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் இந்த முறை கணிசமான இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து வருகிறது. பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதால் பாஜக தனது தலைமையில் தனி கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக டிடிவி தினகரனின் அமமுக, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக, மற்றும் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாத யாத்திரை 200 சட்டமன்ற தொகுதியை நிறைவு செய்ததின் அடையாளமாக பாஜக சார்பாக சென்னையில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையில் வருகிற 11 ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்வார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பெருங்குடி, சோழிங்கநல்லூர், நந்தனம் ஆகிய 3 இடங்களில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
ஆனால், இங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பாஜக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. செயின் ஜார்ஜ் பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications