வாட்ஸ் அப்பில் போலீஸ் நெட்வொர்க்.. “தீயா பறக்கணும்”: டிஜிபி முதல் கடைநிலை காவலர் வரை.. பரபர உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் நலனுக்காக கடைசியில் உள்ள காவலர் வரை பயன்பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டியவர்கள் காவல்துறையினர். ஆனால், பல நேரங்களில் காவல்துறை அதிகாரிகளே பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் "Tamilnadu police welfare" என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி, கடைசி நிலை காவலர்கள் வரை அனைவரையும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கவும், உடனடியாக தகவல்களைச் சென்று சேர்க்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் டிஜிபி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும்.
அதன்பின் துணையான இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என கடைசி காவலர்கள் வரை இருக்க வேண்டும்.
மற்ற நகரங்களை பொருத்தவரையில் துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைக்கப்பட்டு அதில் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இருக்க வேண்டும். மற்ற நகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் கடைசி காவலர்கள் வரை இணைக்கப்பட வேண்டும்.
இவ்வாறாக அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகள் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்களுக்கு பதிவுகள் அனுப்பப்பட வேண்டும்.
தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடப்படும் காவலர் நலன் சார்ந்த பதிவுகள் உடனடியாக 30 நிமிடத்தில் அடுத்தடுத்த வாட்ஸ்அப் குரூப்பில் அனுப்பப்பட வேண்டும். நான்கு மணி நேரத்திற்குள் அனைத்து காவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் குரூப் களில் அது சென்றடைய வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications