Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து.. விசாரணையை கைவிட்ட தமிழ்நாடு போலீசார்.. என்ன காரணம்! பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையைக் கைவிடுவதாகத் தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.

 Tamil Nadu Police dropped action in Helicopter crash that killed Gen. Bipin Rawat

கடந்த 2021 டிச.8ஆம் தேதி குன்னூர் அருகே Mi-17V5 என்ற ஹெலிகாப்டரில் அவர் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், இதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்டோர் உயிரிழந்தனர்.

கைவிட்ட தமிழ்நாடு போலீஸ்: இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீசார் சந்தேக மரணமா என்ற வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையைக் கைவிடுவதாகத் தமிழ்நாடு போலீசார் அறிவித்துள்ளனர். இந்த விபத்து நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்ட்ர் விபத்து தொடர்பாக 174வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த குன்னூர் போலீசார், விபத்து நடந்த நாளில் வானிலை அனுமதி தரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முக்கியமான ஆதாரங்கள் இல்லாததால் குன்னூர் போலீசார் விசாரணையை நிலுவையில் வைத்திருந்தது. ஹெலிகாப்டரின் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கிடைக்காத நிலையில் விசாரணை நிலுவையில் இருந்தது.

போலீசார் கூறுவது என்ன: இது தொடர்பாக போலீசார் வட்டாரத்தில் கூறுகையில், "சூலூர் ராணுவ விமான தள அதிகாரிகள் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்தனர். அவை அனைத்தும் பாதுகாப்பு ரகசியங்கள் பிரிவின் கீழ் வரும் என்பதால் இந்த தகவலைப் பகிர முடியாது என்றனர். மேலும் தகவல் தேவை என்றால் விண்வெளி பாதுகாப்பு இயக்குநரகத்தை அணுகுமாறு சொன்னார்கள்" என்றார்.

பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுடன் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ தளத்திற்குச் சென்றார். அப்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அது விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து விசாரிக்க முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்ட நிலையில், அவர்கள் கடந்த 2022 ஜன. 14இல் முதற்கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

முதற்கட்ட அறிக்கை: அதில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இயந்திரக் கோளாறு, நாசவேலை அல்லது அலட்சியம் காரணமாக இந்த விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை ஆமோதிக்கும் போலீசார், "எங்கள் விசாரணையும் இதைதான் காட்டுகிறது. குறைந்த உயரத்தில் அடர்ந்த மேகங்கள் இருந்த இடத்தில் ஹெலிகாப்டர் சென்றுள்ளது. அப்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது. எங்களின் விசாரணையில் நாசவேலை நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிய வந்தது. இருப்பினும், அதை உறுதி செய்ய ஹெலிகாப்டர் டேட்டா, மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்காடர்களை கேட்டிருந்தோம். இதன் காரணமாகவே விசாரணையை நிலுவையில் வைத்திருந்தோம்" என்றார்.

இந்தச் சூழலில் தான் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையைக் கைவிடுவதாகத் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+