இது லிஸ்ட்லயே இல்லையே.. காவல் துறையில் புரட்சி.. மக்களிடமே கருத்து கேட்கும் அரசு.. செம முன்னெடுப்பு
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக போலீசார் செயல்படும் விதமும் மாற்றப்பட்டு வருகிறது.
போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள், முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேரடியாக இவர்கள் இடையே இணைப்பை ஏற்படுத்த, போலீசார் - மக்கள் இடையே இருக்கும் பிரிவை குறைக்க பல்வேறு தீவிரமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் போலீசார் செயல்படும் விதம் தொடர்பாக ஆலோசனை வழங்க மக்களிடம் இருந்து நேரடியாக கருத்து கேட்கும் பணிகள் செய்யப்பட உள்ளன.
காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு 5 வது காவல் ஆணையம் (Police Commission) அமைத்துள்ளது. ஆணையம் அசோக்நகர், சென்னை காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் தங்களின் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.
முகவரி : தலைவர்,
5 வது காவல் ஆணையம்,
காவல் பயிற்சி கல்லூரி வளாகம்,
அசோக்நகர்,
சென்னை:
மின் அஞ்சலில் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரி E-Mail ID [email protected]
நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள் 05.12.2023 அன்று காலையில் 10.30 மணி முதல் பிற்பகல் 01.30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரிடையாக சமர்ப்பிக்கலாம். மேல் விவரங்களுக்கு கீழக்கண்ட கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். எண் 9791987112 காவல் கண்காணிப்பாளர். 5வது காவல் ஆணையம், அசோக்நகர், சென்னை-83 என்று தமிழ்நாடு போலீசார் தெரிவித்துள்ளனர் .
மக்களை தேடி திட்டம்: இது போக மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாகக் கிடைக்கின்றனவா? என்பதை முதலமைச்சரே களத்திற்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் "களத்தில் முதல்வர் திட்டம்".
"மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குச் சேவை செய்" என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவின் கனவை நனவாக்கும் திட்டம் இது.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு தீட்டப்படுகின்றன; செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், மக்கள் அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும்.
அரசு இயந்திரம், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், மக்களைத் தேடிச் சென்று பணியாற்ற வேண்டும். மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள். ஒவ்வொரு கிராமத்தில் வசிக்கும் மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சனைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட ஆட்சித் தலைவர். தங்கள் அருகில் இருக்கும் பிற அதிகாரிகள் அன்புக்குரியவராக இருப்பினும், மக்களின் மகத்தான அன்புக்கும், ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் உரியவர்களாக மாவட்ட ஆட்சியர்களைப் பார்க்கிறார்கள்.
திங்கட்கிழமை தோறும் வந்து மனு அளிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் பதவியின்
கம்பீரம் மக்களைக் கலவரம் அடையச் செய்வதில்லை, மாறாக கவர்ந்திழுக்கிறது.
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.
இந்தத்திட்டம், 'களத்தில் முதல்வர்' திட்டத்தின் அடுத்தகட்டம் எனலாம்; மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாவின் கனவுத்திட்டம் என்றும் சொல்லலாம். உங்களை நாடி, உங்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் வருகிறது. நானும் அரசு இயந்திரமும் களத்திற்கு வருகிறோம். கவனமுடன் உங்கள் குறைகளை கேட்போம்; களத்திலேயே தீர்வு காண்போம்; மக்களின் கவலையைப் போக்குவோம்; மகத்தான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற இந்த புதிய திட்டம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications