மீண்டும் 'பரபர’ Go Back Modi.. மதுரையில் மே 30-ல் மோடி, அமித்ஷாக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம்!
சென்னை: தமிழர்களை இழிவுபடுத்தியதால் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக மே 30-ந் தேதி மதுரையில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார்.
ஒடிஷாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலின் கருவறை சாவியை தமிழ்நாட்டுக்குக் கொண்டு போய்விட்டார்கள். தமிழ்நாட்டில் அந்த கருவறை சாவி இருக்கிறது என ஒடிஷா அரசியலின் மையப்புள்ளியான தமிழர் விகே பாண்டியனை விமர்சிக்கும் வகையில் பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு, ஒட்டுமொத்தமாக தமிழர்களைத் திருடர்கள் என இழிவுபடுத்துவதாக கூறி தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதல்வர் ஸ்டாலின் தமது அறிக்கையில், தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் – மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! முன்னதாக, உத்தரப்பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார்.
ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.
மக்களால் வணங்கப்படும் பூரி ஜெகன்னாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும், நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும். ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு
மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும், அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! வாக்குக்காகத் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக வருகை தர உள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தவமிருக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— கோவை இராமகிருட்டிணன் (@kuratpdk) May 28, 2024
இதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஒடிஷா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழர்களை களவாணிகளாக சித்தரித்திருந்தார் மோடி. அதேபோல வட இந்தியர்களை தமிழர்கள் இழிவுபடுத்துவதாக கொச்சைப்படுத்தி பேசியிருந்தார் அமித்ஷா. இந்த இருவரும் வரும் 30-ந் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தருகின்றனர். இந்த இருவருக்கும் தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மதுரையில் மே 30-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications