போடு தகிட தகிட.. பொங்கல் பரிசுதொகுப்புடன் 3 ஆயிரமா? 5 ஆயிரமா? அறிவிப்பை வெளியிடும் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையுடன் 'ரொக்க பரிசு' வழங்குவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அரசு பரிசுத் தொகுப்பை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அரசு பொருட்கள் வழங்குவது வழக்கம். இந்த வருடம் பணத்தொகையும் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. சில தகவல்களின்படி, இந்த ஆண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பொங்கல் பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் பரிசுத் திட்டம்
இதற்கான நிதி ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசாக பணமும், பொருட்களும் சேர்த்து வழங்கப்பட்டது. கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவற்றுடன் ரூ.500 ரொக்கப் பணமும் கொடுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
3000-5000 ரொக்கம்
தற்போதைய திமுக ஆட்சியில் பணத் தொகை வழங்கப்படாதது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்திருத்து வருகின்றனர். இந்த அதிருப்தியை சமாளிக்கவும், தேர்தலை முன்னிட்டும் மக்களுக்கு பெரிய அளவில் நிவாரணத் திட்டம் வழங்கவும், இந்த ஆண்டு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ரூ.3000 வழங்கப்படும் வாய்ப்பே அதிகம் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழகத்தில் சுமார் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் நிலையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகை
இதற்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்குவது குறித்த அறிவுறுத்தலையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ரொக்க பரிசு வழங்கப்படுமா? அது எவ்வளவாக இருக்கும்? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எதிரி வரும் நிலையில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அதாவது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையுடன் ரொக்கம் பணம் வழங்கப்படுவது உறுதி எனவே தலைமைச் செயலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பை புத்தாண்டு பரிசாக இன்று அல்லது நாளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் நிறைவடைந்து விட்டதாகவும், பொங்கல் பண்டிகைக்காக மட்டுமல்லாது, தேர்தலை கருத்தில் கொண்டும் குறிப்பிட்ட அளவிலான பொங்கல் ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் சொல்கின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications