பொங்கலை கொண்டாட ரெடியா? நாளை கைக்கு வரும் ரூ.3,000 ரொக்கம்! டோக்கனை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசையும் வழங்க அரசு அறிவித்த நிலையில், இந்த பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. டோக்கன்களை இன்றுக்குள் கொடுத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், நாளை ஜனவரி 8) பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை, தொகுப்பு, வேட்டி சேலை ஆகியவை வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கூடுதலாக ரூ.3,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என தமிழ்நாடு மு.க.ஸ்டாலின் அறிவித்த மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தை நாளை (ஜனவரி 8) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பொங்கல் பண்டிகை
ஆலந்தூர் நசரத்புரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல் கட்டமாக இந்தப் பொங்கல் பரிசை வழங்குகிறார். அதன்பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த பரிசுகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 22 லட்சத்துக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைகள் இருப்பதால், இந்த அளவிற்கு பெரிய அளவில் பரிசுத் தொகுப்புகளை தயாரித்து வழங்குவது பெரிய பணியாக் உள்ளது. இருப்பினும் அரசு முன்னதாகவே திட்டமிட்டு அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
பொங்கல் ரொக்கப்பரிசு
அதோடு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. ரொக்கப் பரிசு சேர்த்துக் கொண்டால் இந்த திட்டத்திற்காக ரூ.6,900 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகுப்பைப் பெறுவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக இந்த டோக்கன் விநியோகம் நடைபெற்று வந்தது.
டோக்கன்
இன்று (ஜனவரி 7) க்குள் டோக்கன் வழங்கும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. டோக்கனில் எப்போது வர வேண்டும், எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதெல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால் மக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம் துவங்குவதால் ரேஷன் கடைகள் 9, 10, 11ஆம் தேதிகளிலும் முழு நாளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஒரு நாளுக்கு 200 முதல் 300 குடும்பங்களுக்கு சீரான முறையில் பரிசுகள் வழங்கும்படி அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் சர்க்கரை, அரிசி போன்ற பொருட்கள் முன்பே கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கரும்பும் இன்று முழுதாக அனைத்து கடைகளுக்கும் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆலந்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததும், அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் தங்கள் பகுதிகளில் திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். அதன் பிறகு ரேஷன் கடைகள் முழுவதிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளது.. இதோடு வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்












Click it and Unblock the Notifications