பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்.. மார்ச் 1ல் பொதுத்தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடங்கி உள்ளன. மாநிலம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம்தேதி தொடங்கி 22ஆம்தேதி வரையும், பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ஆம்தேதி தொடங்கி 25ம்தேதி வரையும் நடைபெற உள்ளன.

Tamil Nadu Practical exams for 11,12 school students begins from Today

10ஆம்வகுப்பு தேர்வுகள் மார்ச் 26ஆம்தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம்தேதி வரையும் நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்கி வரும் 24ஆம்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் நடைபெற்று வருகிறது.

பாடவாரியாக காலை மற்றும் மாலை வேளைகளில் செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. செய்முறை தேர்வுக்கான முகப்பு தாள்கள் மற்றும் படிவங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை பங்கேற்பார்கள். 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். செய்முறை தேர்வு மதிப்பெண்களை ஒரு மாதத்திற்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே 1ஆம் தேதியன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+