வீடு, மனை வாங்கப் போறீங்களா? பக்கம் பக்கமா எழுதினா ஃபைன்! பத்தே பக்கத்துக்குள் எழுதி முடிக்கனுமாம்!
சென்னை: தமிழகத்தில் சொத்து பதிவு செயல்முறையை எளிமைப்படுத்தும் நோக்கில், பதிவு செய்யப்படும் பத்திரங்களின் பக்க எண்ணிக்கைக்கு பதிவுத்துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நடைமுறைப்படி, சொத்து விற்பனை பத்திரங்கள் 10 பக்கங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 பக்கங்களை மீறும் பட்சத்தில், 11வது பக்கம் முதல் ஒவ்வொரு கூடுதல் பக்கத்துக்கும் தலா 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும் போது, பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது.
பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது. வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்கும் போது, வாங்குபவர்கள் கிரையப் பத்திரம், விற்பனை ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை பதிவுத்துறையில் பதிவு செய்ய சமர்ப்பிப்பது வழக்கம்.

தமிழ்நாடு சொத்து பதிவு
பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு கணினி முறையில் சேமிக்கப்படுகின்றன. ஒரு பத்திரத்துக்கு 400 ரூபாய் கணினி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் 10 பக்கங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கு மேல் உள்ள பக்கங்களுக்கு தனித்தனி கட்டணம் விதிக்கப்படும். பதிவு பணிகளை விரைவுபடுத்தவும், எளிமைப்படுத்தவும் பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்டார் 3.0
அதன் ஒரு பகுதியாக 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் செயல்பாட்டிற்கு பிறகு, பதிவுத்துறை இணையதளத்தில் தரவுகள் அதிக அளவில் சேமிக்கப்படுவதால் சர்வர் வேகம் குறைவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் புதிதாக பதிவு செய்யப்படும் ஆவணங்களின் பக்க எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விற்பனை பத்திர பக்க வரம்பு
பதிவு செய்யப்படும் ஒவ்வொரு ஆவணமும் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால், பக்க எண்ணிக்கை அதிகரிப்பது சர்வர் சுமையை உயர்த்துகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், கூடுதல் பக்கங்களுக்கான ஸ்கேன் கட்டணத்தை கண்டிப்பாக அமல்படுத்த பதிவாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பதிவுத்துறை இணையதள சர்வரில் ஏற்படும் அதிக சுமையை குறைக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
பதிவு கட்டண உயர்வு
பொதுவாக மனைப்பிரிவு திட்டங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிட திட்டங்களில், சொத்து பல சர்வே எண்கள் மற்றும் உட்பிரிவு எண்களை கொண்டதாக இருக்கும். அவற்றின் எல்லை விவரங்கள், பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் பத்திரத்தில் விரிவாக சேர்க்கப்படுவதால் பக்க எண்ணிக்கை அதிகரிக்கிறது. வழக்கமான முத்திரைத் தாள்களை பயன்படுத்தும்போதும் பக்கங்கள் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
இ-ஸ்டாம்பிங் பயன்
இதற்கு மாற்றாக 'இ-ஸ்டாம்பிங்' முறையை பயன்படுத்தினால் பத்திரத்தை குறைந்த பக்கங்களுக்குள் முடிக்கலாம் என அதிகாரிகள் விளக்குகின்றனர். இந்த முறையில் மின்னணு வழியாக முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டு ரசீது பெறப்படும். அந்த ரசீதை பத்திரத்துடன் இணைப்பதன் மூலம் முத்திரைத்தாள்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இதன் மூலம் பத்திரத்தின் மொத்த பக்க எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். புதிய நடைமுறையை கருத்தில் கொண்டு, பத்திரங்களை எழுதும் போது தேவையான விவரங்களை திட்டமிட்டு 10 பக்கங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை பதிவுத்துறை நிர்வாக நடவடிக்கையாக வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications