நம்பர் 1 உபி; 5வது இடத்தில் தமிழ்நாடு! இந்தியாவில் 14 லட்சம் புற்றுநோயாளிகள்!
சென்னை: இந்தியாவில் உள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்து விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகப் புற்றுநோய் தினம் பிப்ரவரி 3 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகவே அதனை ஒட்டி புற்றுநோய் பற்றிய விவாதம் இப்போது முன்பைவிட அதிகமாகக் கேட்கத் தொடங்கி உள்ளது.

சமீபத்தில் கூட பாடகி பவதாரணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
பழைய திரைப்படங்களில் எல்லாம் பணக்காரர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவதைப் போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும் அரியவகை வியாதியாகத் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், இன்று புற்றுநோயால் சாதாரண ஏழை மக்கள்கூட பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு ஊரில் ஒரு இறப்பு நடக்கும் போது புற்றுநோய் பாதித்து இறந்துவிட்டார் என மிகச் சாதாரணமாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

முன்பு திரையரங்கத்திற்குப் படம் பார்க்கச் சென்றால், 'இவர் பெயர் முகேஷ்' என்று ஒரு எச்சரிக்கை படத்தைப் போடுவார்கள். புகை பிடிப்பதால் எந்தளவுக்குப் பாதிப்புகளை ஒருவர் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை அந்தப் படம் மிகத் துல்லியமாக எடுத்துக்காட்டும்படி அமைக்கும்.
ஆனால், இந்தப் படத்தைப் பார்ப்பதற்கே சிலர் அஞ்சி, திரையிலிருந்து கண்களை விலக்கிக் கொள்வதைப் பலரும் பார்த்திருப்பார்கள்.
இன்றளவும் மிகக் கொடிய நோயாகப் புற்றுநோய் இருந்து வருகிறது. சிலவகையான புற்றுநோய்களிலிருந்து முற்றிலும் குணமாகிவிடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தாலும், மக்கள் மத்தியில் புற்றுநோய் மீது மிகப்பெரிய பயம் இருந்துவருகிறது என்பதே உண்மை.

ஒருவருக்குப் புற்றுநோய் உருவாவதற்கான அதிக காரணங்களில் புகைபிடித்தல் பழக்கமே உள்ளது. சுமார் 22% பேருக்குப் புகையிலை மற்றும் மதுப் பழக்கத்தால்தான் இந்த நோய் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டுவரை 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசின் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்தக் கொடிய நோய் பற்றி சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கோபு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த நோயிலிருந்து எப்படிக் காப்பாற்றிக் கொள்வது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
"இளம் வயதிலேயே பான் மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள்தான் அதிகம் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதைப்போலப் புகை பிடித்தல் மூலம் மிக அதிகமான புற்றுநோய் நோயாளிகள் உருவாகின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் புகைப் பழக்கத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும்.
இந்தியாவில் மட்டும் கடந்த 2023 ஆம் ஆண்டு வரை 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்கிறார்.

இந்தியாவில் கடந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 82 ஆயிரம் பேருக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்கிறார் கதிரியக்க சிகிச்சை துறையைச் சேர்ந்த மருத்துவர் விஜயஸ்ரீ.
புற்றுநோயிலிருந்து விடுபடுவதற்கு அந்த நோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க வேண்டும். அப்படிக் கண்டறியப் பட்டுவிட்டால் அந்த நோயாளியை நிச்சயம் காப்பாற்றிவிட முடியும். இது எல்லா வகையான புற்று நோக்கும் பொருந்தும். முதல் நிலையில் கண்டறியப்படும் புற்றுநோயை 80% வரை குணப்படுத்தி விட முடியும் என்றும் விஜயஸ்ரீ நம்பிக்கை அளிக்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எல்லாம் நோயாளிகள் கடைசிக் கட்டத்தில் நோய் முற்றியபிறகுதான் வருவார்கள். அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதும் கஷ்டம். அவர்களைக் காப்பாற்றுவதும் மிகப்பெரிய கஷ்டம். ஆனால், இப்போது நிலை மாறியுள்ளது. மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.
அப்படி முதற்கட்ட நோய் தாக்குதலின்போது சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பலர் காப்பாற்றப்பட்டு, இன்று நல்ல நிலையில் வாழ்ந்தும் வருகிறார்கள் என்று கூறுகிறார் டாக்டர் கண்ணன்.
உடலில் சாதாரணமாக உருவாகும் கட்டிகள், உடலில் ஏற்படும் விநோதமான மாற்றங்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அலட்சியம் காட்டக் கூடாது என்பது பெரும்பாலும் அனைத்து மருத்துவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

இவை அனைத்தையும் விட, உடல் பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம் என்றும் சொல்கிறார்கள்.
2025ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டுக்கு 15 லட்சத்தைத் தொடும் என்று கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் மத்திய அரசு விளக்கி இருந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
-
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள்












Click it and Unblock the Notifications