ரேசன் கடையில் பாமாயில் கிடையாதா? ரேஷனில் இனி தேங்காய் எண்ணெய்? தமிழக அரசு பதில்? திணறுது திருப்பூர்
சென்னை: விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகள் கோரிக்கை வைத்தபடி உள்ளனர்.

கேரளா அரசு: அதேபோல, கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்றும், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
எனினும் இதுவரை, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.. இதனால், அதிருப்திக்கு ஆளான விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
கடலை எண்ணெய்: அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று திமுக அறிவித்திருந்த நிலையில், அதனை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? என்றும் கேள்விகளை கேட்க துவங்கிவிட்டனர்.
கேரளாவை போல் தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்து எண்ணெய் தயாரித்து ரேஷனில் வழங்க வேண்டும் என்று என்பதே தற்போது விவசாயிகளின் கோரிக்கையாக வலுவாகி வருகிறது.
கொப்பரை: காரணம், தேங்காய் வரத்து அதிகரிப்பால் கொப்பரை விலை தினமும் சரிவடைந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.85 முதல் ரூ.90 வரை விற்கிறது. கேரள மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள் முதல் செய்து, அரசுக்கு சொந்தமான ஆலைகளிலும், தனியார் ஆலைகளிலும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.
இதுபோலவே, கொப்பரை தேங்காய்க்கு நிரந்தரமான விலை கிடைக்க, தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேங்காய் : இந்நிலையில், மாநில அரசு அளித்த வாக்குறுதிப்படி தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் வகையினை மானிய விலையில் ரேஷன் கடையில் விற்க வலியுறுத்தி, திருப்பூரில் வரும் 17ம் தேதி பேரணி போகிறது..
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இதுகுறித்து சொல்லும்போது, "தமிழக அரசு பாமாயிலை இறக்குமதி செய்து, மானிய விலையில் மாதம், 2 கோடி லிட்டர் ரேஷன் கடையில் விற்பனை செய்கிறது. இதனால், தமிழக மக்களின் வரிப்பணம் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்கிறது.. தமிழக விவசாயிகள் வாழ வழியின்றி உள்ள நிலையில் ஆண்டுதோறும், 1,800 கோடி ரூபாய் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தரப்படுகிறது.
தேர்தல் அறிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தேங்காய் மற்றும் கடலையை நேரடியாக கொள்முதல் செய்து, எண்ணெய் தயாரித்து ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும். இப்போது தேங்காய் மற்றும் கடலை விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். .
மத்திய அரசும் தன்னுடைய பங்குக்கு பாமாயிலுக்கு இறக்குமதி வரியை குறைத்துள்ளது. தேங்காய் கொள்முதல் செய்து, நாபெட் நிறுவனம் வாயிலாக, வெளிச்சந்தையில் குறைத்து விற்பனை செய்கிறது. இதற்கு தீர்வு காணக்கோரி கடந்த 30 வருடங்களாக விவசாயிகள் கோரி வருவதுடன், இதை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது..
மீண்டும் அறிவிப்பு: இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 17 ம் தேதி, திருப்பூரில் கோரிக்கை பேரணியை நடத்த உள்ளோம்.. பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபம் முன்பு புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் வரை இந்த பேரணி நடைபெற உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தென்னை விவசாயிகள் இதில் பங்கேற்க போகிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications