"பிரிச்சி போடு".. ரேஷனில் வந்தது மாற்றம்.. வெறும் 2 நிமிஷம்தான்.. ரேஷன் அட்டைதாரர்கள் செம மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இரட்டை ரசீது போடும் முறையில் மக்கள் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க, புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழக அரசு, ரேஷன்கார்டுதாரர்களின் நலனுக்காகவே, நிறைய அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. ரேஷன்தாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது.

அதில் ஒன்றுதான், 2 ரசீது போடும் முறையாகும்.. தமிழக ரேஷன் கடைகளில் இந்த புதிய நடைமுறையானது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன..
ரேஷன் கார்டு: மத்திய அரசின் இலவச அரிசிக்கு தனி ரசீதும், தமிழக அரசு அரசு வழங்கும் பொருட்களுக்கு தனி ரசீதும் வழங்கப்படுகின்றன. அதாவது, ரேஷன் கடைகளில் முன்னுரிமை (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட (ஏஏஒய்) ரேஷன் அட்டைகளுக்கு 2 ரசீது போடும் முறை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், 2 வகையான ரசீதுகள் போடுவதால் சில நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.. குறிப்பாக, முன்னுரிமை (பிஎச்எச்) மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஓய்) ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும்போது அரிசிக்கு மட்டும் முதல் ரசீதை மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், 2-வது ரசீதை மாநில அரசு ஒதுக்கீட்டிலும் என்று பிரித்து 2 முறை பிஓஎஸ் இயந்திரத்தில் ரசீதுகளை பதிவு செய்ய நேரிடுகிறது. இதனால், ரசீது போடுவதற்கு காலதாமதம் ஏற்படுகின்றன..
காலதாமதம்: இந்த காலதாமதத்தினால், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.. பெரும்பாலும் இந்த முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்கள் முதியவர்கள்தான். இவர்களிடம் ஒரு முறை கைரேகை பெற்று ரசீது போடுவது, அதைவிட சிரமமான காரியமாக இருந்தது.
எனவே, இரட்டை ரசீது போடும் முறையில் உள்ள காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என்றும், 2 முறை ரசீது போடும் முறையை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.
பிஎஸ்ஓ: இதையடுத்து, புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.. அதன்படி, பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட்டை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது.. இந்த புதிய மாற்றத்தினால், பிஓஎஸ் இயந்திரத்தில் இரட்டை ரசீது போடும்போது ஏற்பட்ட 5 நிமிட காலதாமதமானது, இப்போது 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுவிட்டதாம்..
2 நிமிடம்: ஆனால், இந்த 2 நிமிட காலதாமதமும் ஏற்படாத வகையில், பிஓஎஸ் இயந்திரத்தில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால், முதல் ரசீது போட்டவுடனேயே 2-வது ரசீதை போடும் வாய்ப்பு நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது... ஆக, 2 நிமிடங்களில் இரண்டு 2 ரசீதுகளும் வழங்கும் வகையில், மென்பொருள் திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது, ரேஷன் அட்டைதாரர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications