Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி ஏற்றி இறக்கும்போது சிந்தியதால் ரூ.1,900 கோடி நஷ்டம்.. ஆய்வில் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசியை ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசிகளால் மட்டுமே ரூ.1,900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது..

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆக உள்ளது. பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆக இருக்கிறது. ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன.
இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று வழங்கப்படுகிறது.

ration shops ration card

இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வீணாவது குறித்து நாடு தழுவிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் 2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது.

ராய தாஸ், ரஞ்சனா ராய் மற்றும் அசோக் குலாட்டி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட ஆய்வின் அறிக்கையில் தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கான அரிசியின் பொருளாதாரச் செலவு ஒரு குவிண்டால் அரிசிக்கு ரூ.3,670 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி என்று விநியோகிக்கப்படும் நிலையில், மூட்டையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக சிந்திய அரிசியின் அளவு சுமார் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு உணவளித்திருக்கும் அளவுக்கு சமமானது என்று கூறப்பட்டுள்ளது.

அரிசி கசிவு தொடர்பான ஆய்வில் கசிவு குறைவாக இருக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரம் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தமிழ்நாட்டை விட கசிவு விகிதம் குறைவாக உள்ளது. அகில இந்திய அளவில், தோராயமாக 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை மக்களுக்கு சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் ரூ.69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆய்வின் முடிவுகள் ஒருபுறம் எனில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உணவு பொருட்களின் கசிவைக் குறைக்க நடவடிக்கையை குறைத்து வருவதாக கூறப்படுகிறது. ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2024 வரை, சிவில் சப்ளைஸ் சிஐடி சுமார் 42,500 குவிண்டால் கடத்தப்பட்ட அரிசியை பறிமுதல் செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.2.4 கோடி என்றும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்படுவதால், போலி குடும்ப அட்டை புழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் 2 தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஆய்வு அறிக்கை குறித்து இரண்டு நாள் முன்பு கருத்த தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ. 69,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ. 1,900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக் குழு (Indian Council for Research on International Economic Relations) என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் முறைகேடான வழிகளில் திருப்பிவிடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.

2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி, அரசின் கணக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, பயனாளிகளைச் சென்றடையவில்லை. இது நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசியின் அளவில் 15.80 சதவிகிதம் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிசி பயனாளிகளைச் சென்றடையவில்லை என்றால், எங்கு சென்றிருக்கும் என்ற வினாவுக்கு பதிலளித்த ஆராய்ச்சி அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் அசோக் குலாட்டி, அந்த அரிசி வெளிச்சந்தையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்" என்று கூறியிருக்கிறார். அதாவது நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி அப்பட்டமாக கடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியில் ரூ. 1,900 கோடி மதிப்புள்ள 5.2 லட்சம் டன் அரிசி கடத்திச் செல்லப்படுவதை மன்னிக்கவே முடியாது. அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையின்றி இந்தக் கடத்தல் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது. இதே காலகட்டத்தில் வெறும் ரூ. 2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டும்தான் தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடத்தல் தொடர்பாக ஒரு சில நியாயவிலைக் கடை ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை." என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+