இன்று பத்திர ஆபிஸ் போறவங்களுக்கு குட்நியூஸ்.. குவியும் மக்கள்.. பதிவுத்துறையின் கிரேட் அறிவிப்பு
சென்னை: சுபமுகூர்த்த தினத்தில் பத்திரப்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதை அறிந்த கொண்ட தமிழக பதிவுத்துறை, அவர்களுக்கு நல்ல செய்தியை கூறியுள்ளது. ஆவணி மாதத்தின் முதல் நல்ல சுப முகூர்த்த நாளான இன்று 21-ந் தேதி பத்திர பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதனால் இன்று பத்திரம் பதிய பலரும் ஆர்வமாக உள்ளனர்.
பொதுவாக வீடு, நிலம், மனை, காலியிடம் போன்றவை வாங்குவோர் நல்ல நாள், நல்ல நேரம் ஆகியவற்றை பார்த்து தான் வாங்குவதை விரும்புகிறார்கள்.

குறிப்பாக பத்திரம் பதியும்நாள் மிக சுபமுகூர்த்த தினமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.ஆனால் பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு எளிதாக இருக்காது. அதிகப்படியான மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனால் பலரும் பத்திரம் பதிய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் சுபமுகூர்த்த நாளில் பத்திரம் பதிய சிறப்பு வசதிகளை பதிவுத்துறை அறிவித்து வருதுகிறது. அண்மையில் ஆடி 18 அன்று, அதாவது ஆகஸ்ட் 3ம் தேதி பத்திரங்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டது. அரசுக்கும் ஏரளாமன வரி வருவாய் கிடைத்தது. அந்த வகையில் தான் முகூர்த்த நாளான வருகிற 21-ந் தேதி பத்திர பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்தார்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்து 449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதை ஏற்று ஆகஸ்ட் 21-ம் தேதி ஒரு சார்பதிவாளர் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
இதுதவிர ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்."இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ம் தேதியான இன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. பலரும் பத்திர ஆபிஸில் பத்திரம் பதிய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்று நிறைய பத்திரங்கள் பதியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications