டி.என்.பி.எஸ்.சி. பரீட்சையில் பாஸாகி அக்ரி ஆஃபிசராக அரசுப் பணி! கதிரவன் ஐ.ஏ.எஸ். கடந்து வந்த பாதை!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் ஐ.ஏ.எஸ்.
சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் கதிரவன் ஐ.ஏ.எஸ். மாரடைப்பு காரணமாக நேற்று காலமானது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி 1996 ஆம் ஆண்டு வேளாண் அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்தார் கதிரவன் ஐ.ஏ.எஸ்.
இதனிடையே 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கன்ஃபெர்ரட் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்றார் கதிரவன்.

கதிரவன் ஐ.ஏ.எஸ்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காந்திப்புரம் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன். இவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் கடந்த 1996ஆம் ஆண்டு வேளாண் அலுவலராக அரசுப் பணியில் சேர்ந்தவர். அதன் பிறகு பதவி உயர்வு அடிப்படையில் பல பதவிகளை அலங்கரித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அறந்தாங்கி ஆகிய ஊர்களில் வருவாய் அலுவலராக பணியாற்றிய கதிரவன் 2002ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட துணை கலெக்டர் ஆனார்.

மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர்முக பொது உதவியாளராகவும் கதிரவன் பணியாற்றியிருக்கிறார். கன்ஃபெர்மண்ட் ஐ.ஏ.எஸ். ஆக கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் பதவி உயர்வு பெற்றார் கதிரவன். அதைத் தொடர்ந்து சேலம் ஆவின் பொது மேலாளர், மதுரை மாநகராட்சி ஆணையர் என பல பதவிகளை வகித்திருக்கிறார். ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும் சில ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கதிரவன் பதவி வகித்திருக்கிறார்.

2 மகள்கள்
தமிழ்நாடு கனிமவளத்துறை இயக்குநராக பணியாற்றிய கதிரவன் கடைசியாக தமிழ்நாடு நெடுஞ்சாலை திட்ட இயக்குநராக பணியாற்றி வந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது சென்னை நெற்குன்றத்தில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்தச் சூழலில் தான் மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமாகியிருக்கிறார். அவரது இறுதிச் சடங்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்தக் கிராமத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி ஐ.ஏ.எஸ். இல்லை
நேரடி ஐ.ஏ.எஸ். ஆஃபிசர் இல்லாவிட்டாலும் கூட நிர்வாகத் திறமையில் கதிரவன் கெட்டிக்காரர் என்கிறார்கள் சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கீழ் நேரடியாக பணியாற்றிய கதிரவன், நெடுஞ்சாலை திட்டப்பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர் எனத் தெரிவிக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications