தமிழக மாணவர்களே குட்நியூஸ்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக 9ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கிய நிலையில் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. இதனிடையே 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில் 1-3ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 - அக்டோபர் 2ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும், 4 முதல்-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 - அக்.2ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் 2 கட்டங்களாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக அக்டோபர் 6ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் காலாண்டு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதிக்கு பதிலாக 9ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6 முதல் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications