Tamil nadu schools reopen: காலாண்டு தேர்வு முடிஞ்சது! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?
சென்னை: தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து அக்டோபர் 6ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. விஜயதசமி நாளில் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த 15 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில் அவை நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, மாணவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, கல்வி முறையில் சமநிலையை உறுதி செய்யும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பெற்றோர்களும், மாணவர்களும் விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தனியார் பள்ளிகள் இந்த சுற்றறிக்கையை பின்பற்றி, கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. அது போல் இந்த விடுமுறை நாட்களில் சரஸ்வதி பூஜை, விஜயதசமியும் வந்துவிடுகிறது.
மேலும் தீபாவளி பண்டிகை 20,21 ஆகிய தேதிகளில் வருகிறது. ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதால் மாணவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். இது போதாகுறைக்கு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மழையால் மாவட்ட வாரியாக மழையின் தீவிரத்தை வைத்தும் விடுமுறை கிடைக்கும். அப்படியே அரையாண்டு முழுவாண்டு தேர்வும் அடுத்தடுத்து வந்து விடுமுறை கிடைக்கும்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications