TAPS ஒரு சவலைக் குழந்தை.. உரிய போஷாக்கினை அளிக்க தேவை அரசாணை! தமிழ்நாடு அரசுக்கு பறந்த கோரிக்கை!
சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கும் வகையில் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது அறிமுக நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சவலைக் குழந்தையாக இருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கூறியுள்ளது.
2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பங்களிப்பு ஓய்வூதியம் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற புதிய ஓய்வு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்
அதன்படி 25 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடையோடு, இறுதி சம்பளத்தில் 50 சதவீத முறை ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது அறிமுக நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சவலைக் குழந்தையாக இருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவர் வெங்கடேசன் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடித்தத்தில்," தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 03.01.2026 அன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார். 23 ஆண்டு கால ஓய்வூதியத்தினை பெறுவதற்கான போராட்டத்தில், உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் என்பது ஒரு மைல்கல் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
தமிழ்நாடு அரசு
ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் விடுபட்டுள்ளதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது அறிமுக நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சவலைக் குழந்தையாக இருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கருதுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம்
எனவே, இதற்கு உரிய போஷாக்கினை அளித்து, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போலவே, பின்வரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இதற்கான அரசாணையினை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சரை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
தலைமைச் செயலகச் சங்கம்
ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை முற்றிலுமாக இரத்து செய்திட வேண்டும். இதுநாள்வரை பிடித்தம் செய்த தொகையினை பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போல் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்றிட வேண்டும். பணி ஓய்வின்போது, பொது வருங்கால வைப்பு நிதித் தொகையினை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும்.
ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம்
பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் பெறும் வசதியினை வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும்போது, 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினைத் தொகுத்து வழங்க வேண்டும். மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள், அவரது கணவன்- மனைவி- வாரிசுகள் இறக்க நேரிடும் நிகழ்வுகளில், அப்பணியாளரின் சேமிப்புத் தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும்" எனகூறப்பட்டுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications