தமிழகத்தில் மீண்டும் தீவிரமாக பரவும் கொரோனா: இன்று 3672 பேருக்கு பாதிப்பு - 11 பேர் மரணம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவில் இருந்து இன்று 1,842 பேர் குணமடைந்தனர். மாநிலம் முழுவதும் கொரோனாவிற்கு இன்று 11 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9, 03,479 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 12,789 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 13 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,67,946 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு 1,25,89,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Tamil Nadu sees over 3,672 coronavirus cases; reports 11 deaths

சுகாதாதரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று மேலும் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,03,479 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,842 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,66,913 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 23,777 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,789 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 6 பேரும் தனியார் மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,45,385 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,196 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,58,058 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,476 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை 2,00,12,235 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,056 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 255074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+