தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் - ஒரே நாளில் 3,986 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரம் பேரை நெருங்கியது. 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் 1824 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மாநிலம் முழுவதும் இன்று கொரோனாவிற்கு 3986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,11,110 பேராக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,824 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் இதன் மூலம் 8,70,546 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 27,743 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video

கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் தனியார் மருத்துவமனையிலும் 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,821 பேராக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 260 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 79,927 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,98,45,778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1459 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 332 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 390 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருவள்ளூரில் 208 பேருக்கும், திருப்பூரில் 141 பேருக்கும் தஞ்சாவூரில் 108 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications