‛மே 10’.. 10ம் வகுப்பு ரிசல்ட் தேதி அறிவிப்பு.. எப்படி பார்க்கலாம் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 10ம் தேதி) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தமிழகத்தை பொறுத்தவரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடந்தது. அதன்பிறகு விடுமுறை வழங்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 9.10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4.57 லட்சம் பேர் மாணவர்கள். 4.52 லட்சம் பேர் பெண்கள். ஒரு 3ம் பாலினத்தவர் ஆவார்கள். இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ரிசல்ட் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் தான் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10ம் தேதி (நாளை மறுநாள்) வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படும். அன்றைய தினம் மாணவ மாணவிகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்வு எழுதிய மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதேபோல் நூலகங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications