10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது: எப்படி பதிவிறக்கம் செய்வது?-விவரம்
ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in,tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளத
சென்னை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று காலை 11 மணி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக மூடப்பட்டது. இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த முடியாததால் இந்த தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 - 2020ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மதிப்பெண்களுடன் கிடைத்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் முழு ஆண்டிலும் கிடைத்தது. அதே நேரத்தில் 2020 - 2021ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் பாடங்களை படிக்காமல் தேர்வும் எழுதாமல் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். வெறும் தேர்ச்சி என்று மட்டுமே போட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தது.
பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாத காரணத்தால் எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வில் இருந்து 50 சதவிகித மதிப்பெண்களும், +1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவிகிதமும், +2 செய்முறை தேர்வில் 30 சதவிகிதம் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு கடந்த ஜூலை மாதம் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. மதிப்பெண்ணில் திருப்தி ஏற்படாத மாணவர்கள் சிலர் விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர். கல்லூரிக்கும், உயர்கல்வி பயிலவும் இந்த மதிப்பெண்களைக் கொண்டு விண்ணப்பம் செய்துள்ளனர்.
11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பிளஸ் 1, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இன்று காலை 11 மணி முதல் இந்த சான்றிதழ்கள் www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிறந்த தேதி மற்றும் மாணவர்களின் பதிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இன்று காலை 11 மணி அளவில் மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் தேர்வு துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் பதிவு எண், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை பதிவு செய்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.பள்ளிகளும் தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழக பள்ளிகளில், 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற உள்ளன. சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications