எந்தவொரு நுழைவுத் தேர்வும் கூடாது.. தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கை.. நாளை வெளியிடும் ஸ்டாலின்?
சென்னை: மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. 650 பக்கங்கள் கொண்டு கல்விக் கொள்கை அறிக்கையைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இதன் முழு அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.
மத்திய அரசு நாடு தழுவிய அளவில் புதிய கல்விக் கொள்கையை 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. மத்திய அரசின் இந்த கல்விக் கொள்கைக்கு, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த திமுக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க உள்ளதாக முதல் பட்ஜெட்டிலேயே அறிவித்தது.

இதற்காக முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை பெற ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் மாநில கல்விக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இதன்பின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட தமிழக அரசு, உடனடியாக அந்த அறிக்கையை வெளியிடவில்லை. இதனால் பல்வேறு கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தமிழில் 650 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் கொண்ட மாநில கல்விக் கொள்கையை நாளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையில், 3, 5, மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அதேபோல் பள்ளிகளில் சேர்வதற்கு எந்தவிதமான நுழைவுத் தேர்வையும் நடத்த கூடாது என்றும், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை 11ஆம் வகுப்பில் செயல்படுத்துவதற்குப் பதிலாக 9ஆம் வகுப்பில் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கையைப் பொறுத்தவரை 11 மற்றும் 12 ஆகிய வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வைத்தே உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications