வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும்.. அரசியல் பேச வரல.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: வாரிசுகளால் ஏராளமான தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியைப் பெற்றுள்ளார்கள். நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, மூன்று நான்கு ஐந்து என்று பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு எம்.ஐ.டி எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா இன்று நடைபெற்றது. 1949ல் நிறுவப்பட்ட எம்.ஐ.டி 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மாணவர்கள் மத்தியில் வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் தான் இடம்பெற்றுள்ளன. மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி விழாக்களில் நேரு, காமராஜர், இந்திரா காந்தி, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக எம்.ஐ.டி விளங்குகிறது.
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் ஏபிஜே அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை என்று நினைக்கிறேன். படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக எம்.ஐ.டி. வளர்த்தெடுத்து வருகிறது.
தொழில் அதிபரும், கொடையுள்ளத்தில் சிறந்தவருமாக விளங்கிய மரியாதைக்குரிய சி.ராஜம், இந்தியா ஹவுஸ் என்ற தனது சொத்தை விற்று எம்.ஐ.டி என்ற நிறுவனத்தை 1949-ஆம் ஆண்டு நிறுவினார். 1955-ஆம் ஆண்டு முதல் அவரது மகன் சி.ஆர்.இராமசாமி இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று அவருடைய பேத்தி டாக்டர் பிரேமா சீனிவாசன் இந்த கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார். வாரிசுகளால் இந்தக் கல்வி நிறுவனமும் வளர்ந்துள்ளது.
வாரிசுகளால் ஏராளமான தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியைப் பெற்றுள்ளார்கள். இந்த வாரிசுகளால் தமிழ்நாட்டின் இளைய சக்தியானது அறிவாற்றல் பெற்றுள்ளது. நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, மூன்று நான்கு ஐந்து என்று பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ராஜம் அவர்களின் குடும்பம்! அதற்கு அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, சுகாதாரத்தில் சிறந்து விளங்குவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். அதனால் தான் மாணவர்கள் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்தோம். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது அறிவாற்றலிலும் முதல் இடத்தை பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்திட்டங்களின் அனைத்து பயனையும் எம்.ஐ.டி. மாணவர்கள் பெற்று வருகின்றனர். அதிநவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் கட்டுவதற்கு ரூ.50 கோடியும், கற்றல் வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கப்படும்." எனத் தெரிவித்தார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications