பத்திரப்பதிவு முறையில் மாற்றம்.. மக்களை நிற்க வைத்து பேசக்கூடாது.. மீறினால் அவ்ளோதான்.. அரசு அதிரடி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நிற்க வைக்கக் கூடாது எனப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. ஒவ்வொரு அதிகாரியின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக்காகக் குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.. இந்த புதிய விதிமுறையை மீறி பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது சிசிடிவி கண்காணிப்பு மூலம் கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது..
தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறை மூலமாக ஆவணப் பதிவுகள், திருமணப் பதிவு, வில்லங்கச் சான்றிதழ் நகல்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன..

தமிழக பத்திரப்பதிவு
இந்த சேவைகளை பெறுவதற்காகத் தமிழகம் முழுமையிலும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.. இந்த நிலையில், பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும்போது அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்..
அதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளைச் சார் பதிவாளரிடமோ அல்லது அங்கு பணிபுரியும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களிடமோ சமர்ப்பிக்க வரும்போது, அவர்களின் மேஜைக்கு முன்பாக கண்டிப்பாக நாற்காலிகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
சார் பதிவாளர் அலுவலகம்
ஒவ்வொரு அலுவலரின் மேஜைக்கு முன்னாலும் பொதுமக்களுக்காகக் குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் கண்டிப்பாகப் போடப்பட்டிருக்க வேண்டும்.. பொதுமக்களை நாற்காலியில் உட்கார வைத்துதான் சார்பதிவாளர்கள் மற்றும் ஊழியர்கள் பேச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது..
எந்தவொரு சூழ்நிலையிலும், பொதுமக்கள் எவரையும் நிற்க வைத்துக்கொண்டு அதிகாரிகள் பதிலளிக்கக் கூடாது.. இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளும், அறிவுரைகளும் ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும்போது அத்தகைய நடைமுறை பல அலுவலகங்களில் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்து உள்ளது..
நிம்மதியில் பொதுமக்கள்
எனவே, இனிவரும் காலங்களில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள், துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகங்கள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் மூலம் சார் பதிவாளர் அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.. இந்த சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை மீறி, பொதுமக்களை நிற்க வைக்கும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் எச்சரிக்கப்பட்டு உள்ளது..!!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications