இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க.. மின்சார கட்டணம் எகிறிடும்.. இபி போர்ட் விடுத்த எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் புதிய முடிவு ஒன்றை லண்டன் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பெயரில் அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்ட திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்ட திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை மூன்று முறை மீறும் வீட்டு நுகர்வோர் கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மின் பயன்பாட்டாளருக்கும் குறிப்பிட்ட அளவு மட்டுமே மின்சார லோடு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறினால் அபராதம் செலுத்தப்படும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சுமை 8kW ஆகவும், அதைத் தாண்டி 10kW பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
ஒருமுறை லோடு கூடினால் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு வருடத்தில் மூன்று முறை 10kW ஐத் தொட்டால், 10kW உங்கள் இணைப்பு சுமையாக நிர்ணயிக்கப்படும். இதற்கு நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சமீபத்திய கட்டணத்தின்படி 1 கிலோவாட் மூன்று கட்ட இணைப்புக்கான மேம்பாட்டுக் கட்டணங்கள் ரூ. 5,110 மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ. 950/கிலோவாட் ஆகும்.
இந்த லிமிட்டை தாண்டும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 2-3 வகையாக பிரிந்து உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.
மாற்றங்கள் வரும்: டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சில மாநிலங்கள் அவற்றின் மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பிரிவுக்குப் பிறகு சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன. அதாவது இந்த துறையை இரண்டாக பிரித்த பின் அவை சாதகமான முடிவுகளை பெற்றுள்ளன.
டான்ஜெட்கோவை மூன்று நிறுவனங்களாக மாற்றினால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி செழித்து திறம்பட செயல்பட முடியும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கடன் அடியோடு குறையும் என்றும் மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications