வாட்ஸ் ஆப்பை எடுங்க.. இனி பவர் கட் ஆனா ஈஸியா புகார் சொல்லலாம்.. மின்சார வாரியம் செம நடவடிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மற்றும் சென்னை மின் பகிர்மானக் கட்டுப்பாட்டு மையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.

மழையால் ஏற்படும் மின் சேதாரங்களை விரைந்து சீரமைக்க 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு ரூ.4.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்விற்கு பின் குறிப்பிட்டார். மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும் ரூ.10 லட்சம் வீதம் வழங்கப்படும். புகார்களை 9498794987 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
மின்தடை புகார் எண்; உங்கள் வீட்டில் மின்சார தடைகள் ஏற்படும் பட்சத்தில் பின்வரும் விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
1. உங்கள் ஏரியாவிற்கான இபி அலுவலக எண் கூகுளில் கிடைக்கும். இந்த நம்பருக்கு போன் செய்யலாம்.
2. மின்னகத்தின் இலவச நம்பருக்கு போன் செய்யலாம்.
3. 9498794987 என்பதுதான் இலவச மின்னக நம்பர் ஆகும். இதற்கு நீங்கள் போன் செய்து சில நிமிடங்கள் காத்திருந்தால் புகார் அளிக்கலாம்.
4. புகார் அளிக்கும் போது உங்களின் பகுதி, தெரு மற்றும் மின்சார இணைப்பு எண் ஆகியவை மிக முக்கியம்.
5. இல்லையென்றால் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான https://twitter.com/TANGEDCO_Offcl பக்கத்தில் நீங்கள் உங்கள் புகார்களை கொடுக்கலாம்.
புதிய புகார் முறை: இதோடு இல்லாமல் இனி தமிழ்நாட்டில் மின்சாரம் தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மழை காலத்தை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, அந்த வகையில் சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 94440 99255 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 94458 50739 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 94983 78194 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56672 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் -91500 56673 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், செங்கல்பட்டு பகுதியில் வசிப்பவர்கள் 91500 56675 வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம், காஞ்சிபுரம் பகுதியில் வசிப்பவர்கள் 91500 56674 ஆகிய வாட்ஸ் அப் எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.
அதிரடி மாற்றங்கள் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பதவி ஏற்றதில் இருந்தே பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில்தான் சமீபத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டது. இது போக புதிய முடிவு ஒன்றை லண்டன் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பெயரில் அவர் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி கூடுதல் லோடு மின்சாரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சாரம் வழங்கல் சட்டத்தின் திருத்தத்தின்படி, 12 மாதங்களில் அனுமதிக்கப்பட்ட மின்சுமையை மூன்று முறை மீறும் வீட்டு நுகர்வோர் கூடுதல் மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications