கரண்ட் கட்.. அசத்துதே மின்வாரியம்.. "ஒரே வாரம்" டைம்.. இல்லாட்டி சிக்கல்தான்.. இதோ வந்தாச்சு அதிரடி
சென்னை: தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆனது மாநிலத்தில் புதிய மின் இணைப்பு மற்றும் மின்சார வழங்கல் விதிகள் குறித்த புதிய உத்தரவுகளை வெளியிட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு பெருத்த நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
தமிழக மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், மின்வாரியத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், புதிய வசதி ஒன்றை மின்துறை கொண்டுவரப்போவதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது..

மின் ஊழியர்கள்: அதாவது, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்கிறார்கள்.. இனிமேல், மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்ப போவதாகவும், மின்கட்டண விபரத்தை தெரிவிக்கவே புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
அதன்படியே, வீடுகளில் கரண்ட் பில் கட்டப்படவில்லையானால், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதை SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் அனுப்ப போகிறார்களாம்.
மெசேஜ்: இந்த மெசேஜ்ஜை பார்த்ததுமே, கஸ்டமர்கள் அலர்ட் ஆவதுடன், மின்சார ஊழியர்களையும் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். இதற்கு பிறகு, 6 மணி நேரம் டைம் தரப்படும்.. கரண்ட் பில்லை கட்டியதும், இந்த 6 மணி நேரத்திற்குள் மறுபடியும் கனெக்ஷன் தந்துவிடுவார்கள்.
அதேபோல, இதுவரை துல்லியமாக கணக்கிடப்படாமல், மொத்தமாக கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.. ஆனால், இனிமேல் இந்த நடைமுறையும் கிடையாது.. எத்தனை யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதோ, அதற்கு மட்டும் "துல்லியமாக" கட்டணம் நிர்ணயம் செய்யப்படுமாம்.. அதற்குரிய கட்டணத்தை மட்டுமே கட்டினால் போதும் என்கிறார்கள்.
விண்ணப்பங்கள்: இப்போது இன்னொரு அதிரடியும் வெளியாகி உள்ளது.. வழக்கமாக, புதிய மின் இணைப்புகள் வேண்டுமானால், 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.. இவைகளில், மின்கம்பம் இணைப்பு என்றால் 60 நாட்களுக்குள்ளும், 90 நாட்களுக்குள் மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என்றும் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இனிமேல், இந்த அளவுக்கு கால அவகாசம் கிடையாதாம்.. புதிய மின் இணைப்புகளை 7 நாட்களுக்குள்ளாகவே வழங்க வேண்டும் என்றும், மீட்டர் பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது மற்றும் மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
என்ன காரணம்: இதற்கு காரணம், தற்போது, புதிய மின் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே மொத்தம் 2 லட்சத்துக்கும் மேல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது..
திருத்தங்கள்: நாளுக்கு நாள் புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்பதால், 7 நாட்களுக்குள்ளாகவே புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும், பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது..
மின்சார வழங்கல் விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை செய்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது, பொதுமக்களுக்கு பெருத்த நிம்மதியை தந்து வருகிறது.
வழிமுறைகள்: ஒருவேளை மின்சார வாரியம் குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பை தரவில்லை, கூடுதல் லோடு கிடைக்கவில்லை, தற்காலிக மின் விநியோக ஏற்பாடு தரவில்லை, சர்வீஸ் கனெக்ஷன் மாற்றம் செய்யவில்லை, மின் கட்டனத்தில் மாற்றத்தில் சிக்கல் போன்ற விஷயங்களில் உரிய இழப்பீடு பெற்று கொள்ளலாம். அதற்கான முறைகள் இவைகள்தான்:
- GISS எனப்படும் கிரிட் இன்டராக்டிவ் சோலார் சிஸ்டம் பொருத்துவதில் கால தாமதம் ஏற்பட்டால், 500 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடுகளை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
- கஸ்டமர்களின் குறைகளை சரியான முறையில் அணுகவில்லையானால், 50 ரூபாய் இழப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்.
- கஸ்டமர்களின் புகார்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் 25 முதல் 250 ரூபாய் வரை இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
- மின்சார மீட்டர்களை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் 100 முதல் 1,000 ரூபாய் வரை இழப்பீடு பெறலாம்.
- பில்லிங் சம்பந்தமாக குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதில் கிடைக்காவிட்டால் 150 ரூபாய் இழப்பீடு பெற முடியும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications