ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தேதி மாற்றம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அவை தற்போது மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. முதலில் நவம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணிபுரிவோரின் தகுதியை தீர்மானிக்க நடத்தப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligibility Test) ஆகும்.

tamil nadu tet 2025 2025

2025ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (http://www.trb.tn.gov.in) வெளியிட்டது.

இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக தாள்-Iற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 1ம் தேதி நடைபெறும். தாள் -II ற் கான கணினி வழி தேர்வு நவம்பர் மாதம் 2ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் தேர்வு வாரியம் தேர்வு தேதியை மாற்றி அறிவித்துள்ளது.

அதன்படி தாள் 1 நவம்பர் 15ஆம் தேதியும். தாள் 2 நவம்பர் 16 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தாள் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் இளங்கலை பட்டம் அல்லது இளங்கியல் கல்வியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தாள் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சியும் தொடக்க கல்வியில் பட்டய படிப்பும் பெற்றிருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+