ஆஹா.. ட்விஸ்ட்.. தலைமை தகவல் ஆணையராகிறாரா இறையன்பு? பெரிய போஸ்டிங்.. ஸ்டாலின் கைக்கு போன "லிஸ்ட்"
தலைமை செயலாளர் வெ இறையன்பு இந்த பதவிக்காக விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பல்வேறு டாப் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி காலியாக உள்ளது. பல ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் நடந்தும் கூட இந்த பொறுப்பிற்கு மட்டும் ஆணையர் நியமனம் நடக்கவே இல்லை.

பதவி
தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.ராஜகோபால் பதவிக்காலம் முடிந்தது. இவருக்கு கீழ் இயங்கிய தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலமும் மொத்தமாக முடிவிற்கு வந்தது. இவர்களின் பதவி மட்டும் நிரப்பப்படாமல் இருந்தது. பொதுவாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது இந்த பதவிக்கு முக்கியமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

ஆலோசனை
இதற்காக ஒரு டீம் களமிறக்கப்படும். அதாவது ஒரு தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். அவருடன் 4 ஆணையர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படுவார்கள். இது போக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இதில் ஆணையர் மற்றும் ஆணைய உறுப்பினர்களின் தேர்வுதான் இன்னும் நடக்கவில்லை. இதற்கான ஆலோசனைகள்தான் நடந்து வந்தன. இந்த குழுவில் இடம்பெற அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி டீம் தயார் செய்தது.

லிஸ்ட்
இந்த நிலையில்தான் தற்போதைய தலைமை செயலாளர் வெ இறையன்பு இந்த பதவிக்காக விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். தற்போது தலைமை செயலாளராக இருக்கும் வெ இறையன்பு மே மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் நல்ல அனுபவம் கொண்டவர் என்பதால் அவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது,. இதையடுத்தே அவர் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த குழுவில் இடம்பெற அனுபவம் கொண்ட தகுதியானவர்கள் பட்டியலை சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி டீம் தயார் செய்தது. இறையன்பு பெயரும் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

தேர்வு எப்போது
வரும் மார்ச் 3ம் தேதி இதற்கான ஆலோசனைகள் நடக்க உள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அன்று நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்ட் படி தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். அவருடன் 4 ஆணையர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படுவார்கள். இது போக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறுவார்கள். இதில் ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. தூண் ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலவீனமா? முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications