கோவை டூ மதுரை.. ஐடி பூங்கா.. தொழிற்பூங்கா.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வருது தெரியுமா? நோட்!
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஐடி பூங்கா, தொழிற்பூங்கா அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் செமி கண்டெக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
வளரும் ஓசூர்
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு தளங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளது.
அடுத்த கட்டமாக வான்வெளியைக் கண்டறிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதை முடித்த பின்னரே, விமான நிலையம் அமைக்க ஒரு தளத்தை தேர்வு செய்ய முடியும். கடந்த அக்டோபரில், ஐந்து இடங்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. அதன்பின் இந்த 5 இடங்களின் நன்மை தீமைகளையும் எடைபோட்டு, சாத்தியக்கூறு அறிக்கையின் முதல் வரைவை AAI மாநில அரசுக்கு வழங்கியது. அதைத் தொடர்ந்து, அந்த 5 இடங்களில் இருந்து அரசாங்கம் இரண்டு தளங்களைத் தேர்ந்தெடுத்தது.
ஒன்று தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) ஏர்ஸ்ட்ரிப்பில் இருந்து 1.5 கிமீ தொலைவிலும் மற்றொன்று உலகம் என்ற பகுதிக்கு அருகே (ஓசூருக்கு கிழக்கு மற்றும் சூளகிரிக்கு வடக்கே) 15.5 கிமீ தொலைவிலும் உள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை அடுத்த மாதம் இறுதிக்குள் தமிழக அரசு உறுதி செய்ய உள்ளதாம். ஏப்ரல் இறுதிக்குள் இடம் உறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாக உள்ளது.
சென்னைக்கு அறிவிப்பு
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு.. ததமிழ்நாட்டை மேலும் முன்னேற்றும் விதமாக சென்னைக்கு அருகே புதிய நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
சென்னைக்கு அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நகரம் அமைக்கப்படும். இதில் ஐடி பார்க்குகள், பன்னடுக்கு கட்டிடங்கள், புதிய ஐடி நிறுவனங்கள், மெட்ரோ, உலக தர வசதி, புதிய நிறுவனங்கள், வெளிநாட்டில் இருப்பது போன்ற வசதிகளுடன் குளோபல் சிட்டி அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக தரமான வசதிகள் எல்லாம் இருக்கும் வகையில் இந்த சிட்டி அமைக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications