Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முரண்டு பிடித்த ஆம்னி பஸ்.. களத்தில் இறங்கிய தமிழக அரசு! சபரிமலைக்கு ஸ்பெஷல் பேருந்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உரிய பர்மிட் இல்லாமல், கேரளாவுக்குள் சென்ற தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனி கேரளாவுக்கு பேருந்துகளை இயக்க மாட்டோம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூற, சபரிமலைக்கு தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க தொடங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தற்போது சீசன் தொடங்கி இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ள ஆம்னி பேருந்துகள் முந்தியடித்துக் கொண்டு பயணிகளை ஏற்றி கேரளாவுக்குள் நுழைந்தன. ஆனால், உரிய பர்மிட் இல்லாததால் ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது.

Tamil Nadu Sabarimala bus

இதனால் ஆடிப்போன ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தமிழக அரசு தலையிட்டு இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினார்கள். பொங்கல், தீபாவளி என பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அதிக கட்டணங்களை வசூலிப்பது, போக்குவரத்து விதிகளை மீறி அசுர வேகத்தில் பேருந்துகளை இயக்குவது, நிறுத்தங்களே இல்லாத இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது, ஒட்டுமொத்த அரசு பேருந்துகள் முழுவதும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாறியபோது.. நாங்கள் மட்டும் மாற மாட்டோம் என்று கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கி அடாவடி செய்தது, என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் செய்யாத சம்பவங்களே கிடையாது. எனவே இந்த கேரள அபராதம் தொடர்பான விஷயத்தில் தீர்வு காண அரசு ஆலோசித்து வருகிறது.

மறுபுறம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்பு பேருந்துகள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், கரூர் பகுதிகளிலிருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதம் 28-ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல டிசம்பர் 27 தொடங்கி 30ஆம் தேதி வரை சபரிமலை கோயில் நடை அடைக்கப்படுவதால் இந்த இடைப்பட்ட நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இயக்கப்படும் அனைத்து அரசு சிறப்பு பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு வசதியும், அவசர உதவிக்கான வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கிறது. ஆம்னி பேருந்துகள் கேரளாவுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு, பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க இருப்பது வரவேற்பை பெற்று இருக்கிறது. பேருந்துகளை www.tnstc.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+