இது ஏஐ காலம்! உலகம் வேகமா ஓடுது.. நாமும் வேகமாக ஓட வேண்டும்! மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது எனவும், உலகம் என்ன வேகத்தில் ஓடுகிறதோ அந்த அளவிற்கு நாமும் ஓடவேண்டும், எங்கு சென்றாலும் துணிச்சலாக நேர்மையாக அறத்துடனும் செயல்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை இராயப்பேட்டையிலுள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு
197 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதனை தொடர்ந்து Research Incubation Compendium என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்," கண்களில் கனவையும் இதயத்தில் இலட்சியத்தை சுமந்து பட்டம் பெற்றுள்ள மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

mk stalin dmk chennai

ஸ்டாலின் உரை

தலைசிறந்த மாணவர்களை உருவாக்கி வரும் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கும் வாழ்த்துகள், உங்கள் வாழ்வில் முக்கியமான நாள் உங்களின் பெற்றோர் ஆசிரியர்களுடன் நானும் வாழ்த்துவதில் மகிழ்ச்சி. உங்களின் கையில் இருப்பது வெறும் காதிதமல்ல. உங்கள் உழைப்பின் விளைச்சல். இது உங்கள் தலைமுறைக்கானது. இன்று உலக புகழ்பெற்ற நிறுவனமாகவும் இந்தியளவில் தனித்துவத்தை இந்த கல்வி நிறுவனம் பெற்றுள்ளது. உங்கள் சீனியர்கள் பெரிய இடத்திலுள்ளனர். நீங்கள் அதுபோல பெரிய இடத்திற்கு வரவேண்டும்.

திராவிட மாடல்

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் மேலாண்மை பயிற்சியினை அளிக்கிறார்கள். உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது..தரவரிசைப்பட்டியலிலும் சிறப்பாக உள்ளது. திராவிட இயக்கத்தால் தான் உலகளவில் தலைசிறந்த இடத்திலுள்ளோம். உயர்கல்விக்கென ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதன் தொடர்ச்சியாக தான் நம்முடைய திராவிட மாடல் அரசும் புதுமைப்பெண். தமிழ்புதல்வன் திட்டம், முதல்வரின் ஆய்வு திட்டம் நிதி உதவி, தகைசால் பள்ளி , காலை சிற்றுண்டி என எண்ணற்ற திட்டங்கள்.

தமிழ்நாடு கல்வி

உலகம் என்ன வேகத்தில் ஓடுகிறதோ அந்த அளவிற்கு நாமும் ஓடவேண்டும். வெற்றிக்கும் வளர்ச்சிக்கு நடுவில் ஒழுக்கம் மிகஅவசியம். இந்த ஏ.ஐ காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் நாம். அடுத்த நடக்கபோவதை கணித்தால் தான் நிலைத்து நிற்க முடியும். சாதக பாதகங்களை யோசிக்காமல் இறங்க கூடாது. காலம் அறிந்து செயல்படவேண்டும். நாம் செய்யும் செயலில் அறம் வாய்மையை தவறவிடக்கூடாது என்பதை நீங்கள் மறக்க கூடாது எப்படிப்பட்ட சூழலிலும் நேர்மை நம்பிக்கை பொறுப்பினை என்றும் கைவிடாதீர்கள்.

மாணவர் ஊக்கம்

எங்கு சென்றாலும் துணிச்சலாக நேர்மையாக அறத்துடனும் செயல்படுங்கள்..நீங்கள் எல்லோரும் நல்ல மனிதர்களாக மாற்றத்தை உருவாக்குவர்களாக வரவேண்டும். நீங்கள் வளர வளர கீழுள்ளவர்களையும் கைதூக்கி விடவேண்டும். இந்திய துணைக் கண்டத்திலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாணிபம் செய்தது நம் தமிழினம். பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை பொறுப்பிலும் புதிய நிறுவனங்களையும் உருவாக்கவேண்டும். பெரிய கனவு காணுங்கள் அதற்காக கடினமாக உழையுங்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+