Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. ஹிந்தி படிப்பதில் தமிழகம் முதலிடமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்புகள் உள்ள நிலையில், தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் உள்ள நபர்கள்தான் அதிக அளவில் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தி பயிலும் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை அலுவலல் மொழியாக அங்கீகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளிப் பருவத்தின் தொடக்கத்தில் இருந்தே குழந்தைகளுக்கு ஹிந்தி மொழியை கற்பிக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு காலம்காலமாக உள்ளது.

hindi tamilnadu

மேலும், புதிய தேசிய கல்வி திட்டத்தையும் தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால், மத்திய அரசு வழங்க வேண்டிய தமிழகத்துக்கான நிதிகூட இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்தப் பணத்தை வழங்க முடியும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டிருக்கும் திட்டமான பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மாநில அரசை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவிப்பதாகவும், இதற்கும் அதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்று தெரிவித்தார். மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டே அனைவருக்கும் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது.

மாணவர்களின் கல்வி விசயத்தில் மத்திய அரசு அரசியல் செய்யக் கூடாது. உடனடியாக பணத்தை விடுவிக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள அழுத்தம் தரப்படுவதாகவும், மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிந்தி திணிப்பு தமிழகத்தில் எதிர்ப்பு இருந்தாலும் சுயவிருப்பத்தோடு கற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், தமிழகத்தில் ஹிந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்தி கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தி மொழியில் தேர்ச்சி பெற மொத்தம் 8 தேர்வுகளை எழுத வேண்டும். இந்த தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை ஹிந்தி பிரச்சார சபா நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 4,73,650 பேர் தேர்வெழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் 3,54,655 பேர் தேர்வெழுதினர். ஆந்திராவில் இருந்து 1,04,959 பேரும், கர்நாடத்தில் இருந்து 5,584 பேரும், கேரளத்தில் இருந்து 8,452 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்நிலையில், தென் மாநிலங்களில் இருந்து தேர்வு எழுதுவோரில் தமிழகம் முதலிடம் வகிப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் ஹிந்தி கற்க விரும்புவோரின் எண்ணிக்கையும் 5 சதவீதம் வரை உயர்ந்து வருவதாகவும் துறை வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+