மஞ்சள் மஞ்சளா ஓடும் பஸ்ஸை விடுங்க.. இனி மொத்தமா "கலர்" மாறப்போகுது.. தமிழக போக்குவரத்து கழகம் அதிரடி
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நீண்டதூர பேருந்து பயணம் என்றாலே, தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் நிறுவனங்கள்தான் சிறப்பான சேவைகளை வழங்கி வருவதாக பயணிகள் நினைக்கிறார்கள். காரணம், அரசு பேருந்துகளில் போதுமான அளவு வசதிகளும், முறையான பராமரிப்பும் இல்லை, அத்துடன், தாமதமாக செல்கின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது.

இந்த கருத்துக்களை மாற்றியமைக்கும் வகையில், தமிழக அரசு அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்தது.. குறிப்பாக, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள பேருந்துகளை புனரமைத்து, தனியார் பேருந்துகளுக்கு இணையான அளவில் சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டது..
புதிய பஸ்கள்: அத்துடன் போதுமான அளவுக்கு, புதிய பஸ்களையும் வாங்கவும், ஏசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 450 டவுன் பஸ்கள் வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர, தமிழக அரசு போக்குவரத்து கழகம், தன்னுடைய பஸ்கள் அனைத்தையுமே, புனரமைப்பதற்காக, டெண்டர் விடுக்கப்பட்டது.. 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்து கள் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மஞ்சள் கலர்: இதையடுத்து, பஸ்கள் புதுப்பிக்கப்படும்போது, அதற்கு புதிதாக மஞ்சள் நிறம் அடிக்கப்பட முடிவானது... ஏற்கனவே சில்வர் மற்றும் நீல நிறத்தில் இருக்கும் பஸ்கள், இப்போது மஞ்சள் நிறத்திற்கு மாறி வருகின்றன.. அந்தவகையில், தமிழகத்தில், 100 மஞ்சள் நிற பஸ்களின் சேவை துவங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பஸ்சுக்கும், 14 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கப்பட்டிருக்கிறது.. வழக்கமாக ஒரு பஸ்சில், 54 இருக்கைகள் மட்டுமே இருக்கும் இதனால், இடநெருக்கடியால் பொதுமக்கள் அவதியுறுவார்கள்..
ஆனால், மஞ்சள் நிற பஸ்களில் 50 இருக்கைகள் மட்டுமே இருக்கும்... அதுமட்டுமல்ல, சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பேருந்துகள் தயாராகி வருவதாகவும், மற்ற 900 மஞ்சள் நிற பஸ்களும் அடுத்தடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன.
நிறம் மாறுகிறது: இந்நிலையில், சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் புதிதாக வரும் அரசு பஸ்களில் நிறம் மாற்றப்படும், என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அனைத்து போக்குவரத்து கழகங்களிலும், ஊழியர்களுக்கு பொதுவான விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது... இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை வகித்தார்.. அப்போது, அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் பொதுவான நிலையாணை விதியைஅமல்படுத்த வேண்டும் என்று தொழிங்சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
பொதுவான நிலையாணை விதியை அமல்படுத்துவது குறித்து வரைவு தயாரிக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 15 நாட்களுக்குப் பிறகு மறுடிபயும் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது, பொதுவான நிலையாணை விதியை அமல்படுத்துவது தொடர்பாக வரைவுசமர்ப்பிக்க வேண்டும், அதன்பிறகு, ஆலோசனை நடத்தி, உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிய நிறம்: இதையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் சொல்லும்போது, "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது விரைவில் நகர்ப்புற பேருந்துகளின் நிறமும் மாற்றப்பட உள்ளது. தமிழக முதல்வரிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன், புதிய நிறம் அறிமுகப்படுத்தப்படும்" என்றார்.
கலர் கலர் பஸ்கள்: ஏற்கனவே, அதிமுக ஆட்சியில் பச்சை கலரில் பஸ்கள் இயக்கப்பட்டன.. பிறகு, பிஎஸ் 4 ரக பஸ் வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது.. இதற்கு பிறகு, இலவச பஸ் என அடையாளம் காண்பதற்காக, பாதி பிங்க் நிறத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளி வாகனங்களும், மஞ்சள் நிறத்தில் உள்ளன.. சமீபத்தில், அரசு பஸ்ஸூம் மஞ்சள் நிறமாகி உள்ளது.. இனிவரும் பஸ்களும் புதிய நிறங்களில் மாற்றப்பட உள்ளது. ஆக, தமிழ்நாட்டில் கலர் கலராக பஸ்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications