துள்ளுதே தமிழ்நாடு.. திடுதிப்பென "நற்செய்தி" வெளியிட்ட தமிழக அரசு..அதுவும் 3 நாளுக்கு.. என்ன பாருங்க
சென்னை: தமிழக போக்குவரத்து துறை சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை திடுதிப்பென்று வெளியிட்டுள்ளது.. இதைக்கேட்டு பயணிகள் துள்ளி மகிழ்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் வசித்து வசித்து வருகின்றனர்.

வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
விடுமுறை நாட்கள்: இதுபோன்ற சமயங்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த வாரமும் தொடர் விடுமுறை வந்ததால், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அதற்குள் இன்னொரு வார இறுதி நாட்களும் நெருங்கி விட்டன.. இதனால், மீண்டும் பொதுமக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகி வருகிறார்கள்.. விடுமுறையை முன்னிட்டு, கடந்த வாரமே ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்தது.. இதனால், நடுத்தர, ஏழை மக்களால் ஆம்னியில் செல்ல முடியாத நிலைமை உள்ளது. அதனாலேயே அரசு பஸ்களை நாடி வருகிறார்கள்.

அடுத்த அதிரடி: இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மீண்டும் சிறப்பு பஸ்களை இயக்க போகிறது.. அதாவது, ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், மேலும் கூடுதலாகே 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாம்.. சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூர் ஆகிய ஊர்களிலிருந்து இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன..
மகிழ்ச்சி: பண்டிகை காலமும்இல்லாமல், தொடர் விடுமுறையும் இல்லாமல், இந்த சிறப்பு பேருந்துகள் எதற்காக அறிவிக்கப்பட்டுள்ளன தெரியுமா? 18,19, 20 இந்த 3 நாட்களிலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடக்க போகிறது. இதன்காரணமாக, வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு ஏராளமானோர் செல்ல வேண்டி உள்ளதாலேயே, வாரஇறுதி நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைக்கேள்விப்பட்டு பெண்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்களாம்.












Click it and Unblock the Notifications