வார இறுதி நாட்கள், சுப முகூர்த்தம், கோவில் திருவிழாக்கள்.. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை: வார இறுதி நாட்களில் வழக்கம் போல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இன்று 600 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருவதற்கான சிறப்பு ஏற்பாடாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வாரமும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் கூடுதல் பயணிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொள்வர் என்பது எதிர்பார்ப்பு.
இதனால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழக்கமான பேருந்துகளை விட கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று திரும்ப இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் சென்னையில் இன்று பிற பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வார இறுதி நாட்களில் மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications