இரவில் நடந்த "மாற்றம்".. அப்படியே "அந்த" பெல்ட் நோக்கி நகர்ந்த மேகங்கள்! தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னையில் ஆங்கங்கே மழை தொடரும். ஆனாலும் கடந்த 2 நாட்கள் போல மழை பெய்யாது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நேற்று இரவில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 6 மணி நேரமாக விடாமல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறது.
வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது

சென்னை
இந்த நிலையில் சென்னையில் பெய்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார். அதில், பெரம்பூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், ராயபுரம், கொளத்தூர், மணலி ஆகிய பகுதிகளில் 300-350 மி மீ வரையிலான மழை கடந்த 36 மணி நேரத்தில் பெய்து இருக்கிறது. இது போன்ற அதிக அளவு மழை பெய்யும் பட்சத்தில் கண்டிப்பாக சில இடங்களில் வெள்ளம் ஏற்படும். சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும். அந்த அளவிற்கு மழை பெய்து உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
மத்திய சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் 150-200 மி.மீ மழை பெய்து உள்ளது. அடையாறு, கிண்டி, பெருங்குடி போன்ற தென் சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் சராசரியாக 100-150 மி.மீ பெய்து உள்ளது. இது கடந்த 36 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு ஆகும். சென்னையில் சமீப வருடங்களில் பெய்த பெஸ்ட் மழை இதுதான்.

என்ன சொன்னார் ?
வடசென்னையில் சில பகுதிகளில் திங்கள் கிழமை இரவு முதல் தற்போது வரை 300 மிமீக்கு அதிகமான மழை பெய்து உள்ளது. தென் சென்னையில் சராசரியாக 150 மிமீ மழை பெய்து உள்ளது. வடசென்னையில் இரவில் மீண்டும் கனமழை பெய்து உள்ளது. வடசென்னை மற்றும் திருவள்ளூரில் சில இடங்களில் ஒரே இரவில் இரட்டை சதம் அடிக்கும் அளவிற்கு மழை பெய்து உள்ளது. ஆவடியில் 167 மிமீ மழை பெய்துள்ளது.

மழை அளவு
கத்திவாக்கத்தில் 155 மிமீ மழை நேற்று இரவு 8.30 மணி வரை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் மொத்தமாக அங்கு 300 மிமீ மழை பெய்து உள்ளது. அதேபோல் திருவிக நகரில் இன்று அதிகாலை மட்டும் 202 மிமீ மழை பெய்துள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 350 மிமீ மழை வரை பெய்துள்ளது. அண்ணா நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் தீவிர கனமழை பெருத்து உள்ளது.

இரவில் நடந்த மாற்றம்
இரவு நேர மழை மேகங்கள் நேற்று நெல்லூர் - ஸ்ரீஹரிகோட்டா நோக்கி நகர்ந்து உள்ளன. இந்த பெல்ட் நோக்கி மழை மேகங்கள் நகர்ந்து உள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு பெல்டின் தென் கிழக்கு பகுதியில் இப்போதும் சில மேகங்கள் உள்ளன. ஆனால் இவை மழை கொடுக்கும் மேகங்கள் போல காணப்படவில்லை. ஆனாலும் ஆங்கங்கே மழை தொடரும். ஆனாலும் கடந்த 2 நாட்கள் போல மழை பெய்யாது.
-
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications