சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 3 மணிநேரத்தில் மழை ஜமாய்க்கப்போகுது... 15 மாவட்ட மக்களே என்ஜாய்

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், கோவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே வெயில் சுட்டெரித்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவானது. மக்கள் புழுக்கத்தில் சிக்கித்தவித்தனர். அனல் காற்று வீசியதையும் தாண்டி ஆங்காங்கே சாரல் மழையும் பெய்தது.

    வெப்பச்சலனத்தால் பல நகரங்களில் இடியும் மின்னலுமாய் கோடை மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. குளுமையான காற்று வீசி திடீரென மழை பெய்தது.

    ஏப்.14 முதல்.. தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.. தேதி போட்டு டேட்டா கொடுத்த வானிலை மையம்ஏப்.14 முதல்.. தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.. தேதி போட்டு டேட்டா கொடுத்த வானிலை மையம்

    கோடை மழை

    கோடை மழை

    மதுரையில் அய்யர்பங்களா, புதூர், திருப்பாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கோடை மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளுமை பரவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மதுரை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. கல்லுப்பட்டி, டி.குண்ணத்தூரிலும் பிற்பகலில் திடீரென மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    குளிர்ந்த காற்று

    குளிர்ந்த காற்று

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோடை மழை கொட்டித்தீர்த்தது. திண்டுக்கல், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பிற்பகலில் மிதமான மழை பெய்தது. சென்னையில் காலை நேரத்தில் சாரல் மழை பெய்தது.

    இடி மின்னலுடன் மழை

    இடி மின்னலுடன் மழை

    வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

    மழை பெய்ய வாய்ப்பு

    மழை பெய்ய வாய்ப்பு

    இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய 15 மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கோடையின் வெப்பத்தில் தவித்த மக்களே மழையை என்ஜாய் பண்ணுங்க.

    English summary
    The Met Office has forecast thundershowers in 15 districts in Tamil Nadu in the next three hours. Kanyakumari, Tirunelveli, Tenkasi, Madurai, Salem, Karur, Theni, Dindigul and Coimbatore are likely to receive showers, the Met office said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X