தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. சென்னைக்கும் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களிலும் கனமழை வாய்ப்பு உள்ளதாலும், மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை இனி அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் வழங்கிய தகவலிலும்கூட, அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பள்ளிகள்: அந்த வரிசையில் இன்று (திங்கட்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆரஞ்சு அலர்ட்: இதனால் இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்படுமா என பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.. எற்கனவே கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகிவிட்டது. இந்த தாமதத்தினால், ஆசிரியர்கள் பாடங்களை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில், மறுபடியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது சாத்தியமில்லை என்கிறார்கள்.
அதேசமயம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதுவும் இல்லாமல் 19 மாவட்டங்களில் தொடர் மழை என்பதாலும், இதில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும், இன்றையதினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விடுமுறையா: கனமழை காரணமாக, பள்ளிக்கு செல்வது பாதிக்கப்படுவதாக பெற்றோர்களும் குமுறி வருகின்றனர்.. எனினும், பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications