"மயிலாப்பூர்" போறீங்களா.. கவனமா இருங்க.. வால்பாறையில் ஆரம்பிச்சிடுச்சு.. தமிழ்நாடு வெதர்மேன் பரபரப்பு
சென்னை: மழை மற்றும் வெப்பநிலை அறிவிப்பு குறித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்..
தமிழ்நாட்டையே கதிகலங்க வைத்த அக்னி நட்சத்திரம் ஒருவழியாக முடிந்துவிட்டது.. நட்சத்திரம்தான் போய்விட்டது. அக்னி இன்னமும் இங்கேயே இருப்பதாக நெட்டிசன்கள் பொருமி தள்ளி வருகிறார்கள்.

வெயில்: அந்த அளவுக்கு வெயில் வாட்டி கொண்டிருக்கிறது.. அக்னி வருவதற்கு முன்பே வெயில் ஆட்டம் காட்ட ஆரம்பித்தது. அக்னி சென்றும் இன்னும் முடியவில்லை.. பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.. மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவது தள்ளி போயிருப்பதை தவிர, அனைத்து தரப்பினருக்குமே இந்த வெயில் கொடுமையாக இருந்து வருகிறது..
இப்போது, வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது.
வெப்பக்காற்று: சென்னையை பொறுத்த அளவில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வந்தது, அத்துடன் அனல் காற்றும் வீசியது... வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து கொண்டுதான் உள்ளது.. ஜூன் 9ம் தேதி அதாவது இன்று முதல் சென்னையில் அதீத வெப்பம் குறையும் என்றும், சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால், அவ்வளவாக வெப்பம் குறையவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான், இன்றைய தின வானிலை குறித்து முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அதில், வடதமிழ்நாட்டில் வெப்பமான நாள் இன்று என்று குறிப்பிட்டுள்ளார்..

அதாவது, "இன்று 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் எட்டியுள்ளது.. சென்னையின் பல இடங்களில், குறிப்பாக கடற்கரை பகுதிகளான பாலவாக்கம், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர் போன்ற இடங்களில் வெயில் 105 டிகிரியை எட்டியிருக்கிறது.. இன்னும் 2 நாளில் இந்த நிலைமை தணியும் என்கிறார்" வெதர்மேன்.
திருவள்ளூர்: அதேபோல, மழை நிலவரம் குறித்தும் வெதர்மேன் பகிர்ந்து கொண்டுள்ளார்.. திருவள்ளூர் பகுதியில் கடற்காற்று வீசி வருவருகிறதாம்..
கேரளாவை பொறுத்தவரை, பருவமழை தொடங்கிவிட்டது என்றும், வால்பாறையிலும் தற்போது கனமழை பெய்து வருவதாகவும் பதிவு செய்துள்ளார்.. முக்கியமாக, வேலூரில் இன்று மதியம் 102 டிகிரி வரை வெயில் அடித்துள்ளது.. ஆனால், அதற்கு பிறகு மழை வெளுக்க துவங்கியுள்ளது. அரைமணி நேரம் விடாமல் பெய்துள்ளது.. அதுவும் ஆலங்கட்டி மழையே பெய்தது என்கிறார் வெதர்மேன்.
ஆலங்கட்டி மழையா?? அதுவும் நம்ம "வெயில்" வேலூரிலா? என்று ஆச்சரியத்துன் கேட்டு வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்..!!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications