வானத்தில் நடக்க போகும் "மோதல்".. இது மட்டும் நடந்தால் ட்விஸ்ட்தான்.. வெதர்மேன் முக்கிய வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டு விதமாக மாற்றம் அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். ஒன்று சென்னை மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளை தாக்கலாம். அல்லது மத்திய தமிழ்நாட்டை தாக்கலாம். இது பெரும்பாலும் சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவை தாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தாழ்வு பகுதி
இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்து உள்ளது.இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்தது. அதன்பின் கடந்த 3 நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலை நிலவுகிறது. தற்போது இந்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் மழை பெய்யும். இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்து சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அதில், அடுத்த இரண்டு நாட்கள், அதாவது இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கொஞ்சம் மழை பெய்யும்.

வெதர்மேன் பிரதீப் ஜான்
நவம்பர் 20ம் தேதியில் இருந்து கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதன்பின் அந்த தாழ்வு பகுதி வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடல் பகுதியை நோக்கி செல்லும். ஆனால் வறண்ட காற்று காரணமாக இது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்தம்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வறண்ட காற்றுக்கு இடையிலான மோதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வெற்றிபெறுமா? அப்படி வெற்றிபெற்றால்தான் தாழ்வு பகுதி புயலாக மாறி அதற்கு பெயர் கிடைக்கும். அதற்கு ஒன்று, இரண்டு நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும். புயலுக்கு மட்டுமே பெயர் கிடைக்கும் என்பதை நாம கவனிக்க வேண்டும்.

வறண்ட காற்று
காற்றழுத்த தாழ்வு பகுதிக்கும், வறண்ட காற்றுக்கும் இடையிலான மோதல் தொடங்கிவிட்டது. நீங்கள் இந்த இமேஜில் பார்ப்பது போல வறண்ட காற்றழுத்த தாழ்வு பகுதியை அழிப்பதற்கு முன்பாக, ஈரமான காற்று வடக்கு தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது. அதேபோல் காற்றழுத்த தாழ்வு பகுதியும் எங்கேயும் நகராமல் அப்படியே இருக்கிறது.

நல்ல மழை
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நல்ல மழையை நாம் எதிர்பார்க்கலாம். வடக்கு தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதியில் இருந்து நல்ல மழை பெய்யும். 20ம் தேதியில் இருந்து தென் தமிழ்நாட்டில் லேசான மழையே பெய்யும். இன்று கன்னியாகுமரியில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும். அதை தவிர மற்ற இடங்களில் வறண்டும், பனி மூட்டமாகவும் காணப்படும், என்று தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications