இந்த வருடம் முதல் முறை இப்படி நடக்குது! சூப்பர் சூறாவளி மோச்சாவிற்கு இடையே.. வெதர்மேன் பரபர வார்னிங்
சென்னை: சென்னையில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மோச்சா புயல் தமிழ்நாட்டை தாக்காத நிலையில் மியான்மரை நோக்கி சென்று கொண்டு இருக்கும் தென்னிந்திய மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

இந்த புயல் தமிழ்நாட்டை தாக்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய மேகங்களை இது இழுத்து சென்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு கோடை மழை முற்றிலுமாக குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இயல்பான வெயிலை விட 2-3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது.
இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.
தமிழ்நாடு வெதர்மேன் :
இந்த நிலையில் சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் போஸ்ட் செய்துள்ளார். அதில்,
சென்னையில் ஆண்டின் முதல்முறை 40 C வெப்பநிலை இன்று பதிவாகி உள்ளது. சென்னையில் காற்றின்றி மொத்தமாக எல்லா பகுதிகளும் வறண்டு கிடக்கிறது.
மதியம் 1.30 மணி நிலவரப்படி சென்னையில் அதிகாரப்பூர்வ வெப்பநிலை
நகர எல்லைகள்
------
எம்ஆர்சி நகர் 40.9
வில்லிவாக்கம் 40.3
நுங்கம்பாக்கம் 40.0
தரமணி 40.0
மீனம்பாக்கம் 39.5
நந்தனம் 39.3
-----
பூந்தமல்லி 40.2
தாம்பரம் 40.1
மோச்சா புயல் பர்மாவை கடந்து உள்ளது. கிட்டத்தட்ட சூப்பர் சூறாவளியாக இது 220 கிமீ வேகத்தில் கிராஸ் செய்யும்.
நுங்கம்பாக்கத்தில், மீனம்பாக்கத்தில் 41 டிகிரி செல்ஸியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளது. சென்னையில் கடல் காற்று அடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மதியம் 3.00 முதல் 3.30 மணி வரை நிலவும் கதிர்வீச்சு வெப்பம் மற்றும் வெப்பச் சேர்க்கை இந்த வெப்பத்தை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்து உள்ளார்.
மோச்சா புயல் - வானிலை
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த 3-5 நாட்களில் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும். தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழ்நாட்டு பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும்.
ஆனால் மற்ற இடங்களில் வெயில் வாட்டி வதைக்கு என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications