ஆக்ரோஷமோ அமைதியோ.. எப்படி வந்தாலும் இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது: அமித் ஷாவுக்கு உதயநிதி ரிப்ளை!
சென்னை: ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மொழியை திணிப்பதை பா.ஜ.கவும், மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்று இந்தி மொழி குறித்து பேசினார். அப்போது "இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டி இல்லை. இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும்" என அமித்ஷா கூறினார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பாஜக அரசு மீண்டும் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் @AmitShah- வின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது.
— Udhay (@Udhaystalin) August 5, 2023
தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை “Local…
உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை ஒரு போதும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டிற்கோ, தமிழர்கள் அதிகம் வாழுகின்ற நாடுகளுக்கோ சென்றால் தமிழைப் போற்றுவது, வடக்கே சென்றால் இந்தியை தூக்கிப்பிடித்து, மற்ற பிராந்திய மொழிகளை "Local Language" என்று சுருக்குவது எனும் பா.ஜ.கவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், மத்திய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications