சொல்லி அடித்த சிங்கப்பெண்கள்.. ஸ்கெட்ச் போட்ட உதய் அண்ணா
சென்னை: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றுவந்த 27 ஆவது மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு அணி 2வது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று திரும்பி இருக்கிறது.
மிகக் கடுமையான சவாலைச் சமாளித்து வெற்றியை ஈட்டிய அணியின் வீரர்களிடம் எப்படி இது சாத்தியமானது எனக் கேட்டால், "எல்லாம் அமைச்சர் உதயநிதியின் கைராசி" என்கிறார்கள் அணியிலுள்ள ஒட்டுமொத்த வீராங்கனைகள்.

கடைசியாக தமிழ்நாடு அணி கடந்த 2017-18ம் ஆண்டு கோப்பையை வென்றது. இதையடுத்து 5 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தங்கப் கோப்பையை வென்றுள்ளது. ஆகவே, தமிழகம் திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் டி.தேவி. என்.சௌமியா, பி. தனலட்சுமி, எஸ்.கௌசல்யா, என்.லாவண்யா.எம்.பவித்ரா, பி.துரிகா, எஸ்.சண்முகப்பிரியா. எம்.சுபாஷிணி. எம். பரமேஸ்வரி, எஸ். பிரியதர்ஷினி. எம்.மாளவிகா, எம்.நந்தினி. ஏ. கார்த்திகா, கே. இந்துமதி, ஆர், வினோதினி. எஸ். ஐஸ்வர்யா, ஆர். சந்தியா. பி.சந்தியா, எஸ். சண்முகப்பிரியா, ஆர். யுவராணி. என். அம்சவள்ளி மற்றும் பயிற்சியாளர்கள் எஸ்.கோகிலா மற்றும் வி.கலா ஆகியோர் சேர்ந்து இந்த வெற்றியை நிஜமாக்கி உள்ளனர்.

"எங்களுக்கு இந்த அரசாங்கம் வந்த பிறகு நிறைய உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. நாங்கள் இந்தளவுக்குச் சாதிக்க அதுதான் முக்கிய காரணமாக இருந்தது என்றே சொல்வேன்" என்கிறார் அணியில் விளையாடிக் கோப்பையை வென்று திரும்பி இருக்கும் வீராங்கனை இந்துமதி.

தமிழ்நாடு ஃபுட்பால் அணியில் உள்ள அனைத்து பெண்களும் அடித்தட்டு குடும்ப பின்புலத்திலிருந்து வந்தவர்கள். அப்பாவை இழந்தவர், வறுமையில் தவித்தவர் என அணியில் உள்ள வீராங்கனைகளின் கதைகள் கண்ணீரால் நிரம்பியவை.
சவால்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ள தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளுடன் பேசினோம்.

முதலில் பேச முன்வந்தார் வீராங்கனை தேவி, "என் அப்பா, அம்மா இரண்டு பேருமே ரொம்ப கஷ்டப்படுகின்றவர்கள்தான். ஊரில் கூலி வேலை செய்துதான் என்னைப் படிக்க வைத்தார்கள். வறுமையான குடும்ப பின்னணியிலிருந்துதான் நான் வந்தேன்.
இந்த ஆட்டத்தில் ஈடுபடும்போது ஊரில் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு தெருக்களில் இயல்பாக வர முடியாது. ஊரில் உள்ளவர்கள் ஒருமாதிரி பார்ப்பார்கள். நமக்குக் கஷ்டமாக இருக்கும். தர்மசங்கடமாக இருக்கும். எங்கள் ஊர், சிறிய கிராமம்தான். அங்கு உள்ளவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் விழிப்புணர்வு அவ்வளவுதான்.

அதை எல்லாம் மீறித்தான் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருகிறேன். வீட்டிலும் வசதி இல்லை. வறுமையான சூழல்தான்.
சௌமியா நாராயணசாமி, "பொதுவாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் என்னைப் போன்ற பெண்கள் ஃபுட் பால் ஆட்டத்தில் கலந்து கொள்ள ஆசைப்பட்டால் அதை ஆரம்பத்திலேயே தடுத்து விடுவார்கள். அப்படித்தான் எங்கள் வீடும் இருந்தது.

அந்த ஆட்டத்தை ஆடும்போது குட்டையா உடை அணிய வேண்டும். ஆகவே அந்த ஆட்டம் எல்லாம் வேண்டாம் என்று தடுத்தார்கள். பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகுதான் நான் மைதானத்தில் வந்து கால் வைக்கவே முடிந்தது. அந்த அளவுக்குத் தடைகள் நிறைந்த துறையில் நாமும் சாதிக்க வேண்டும் என விரும்பினேன்.
சந்தியா, "படித்தது முழுவதுமே விடுதியில் தங்கித்தான். அப்பா இல்லாதவர் அல்லது அம்மா இல்லாதவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி அது. அதில்தான் நான் தங்கிப் படித்தேன். குடும்பத்தில் யாருடைய ஆதரவும் இல்லாதவர்கள்தான் எங்கள் விடுதியில் தங்கிப் படிக்க முடியும். இது அரசு விடுதிதான்.
இந்துமதி, "ஏழாம் வகுப்பு படிக்கும்போதுதான் நான் முதன்முதலாகக் கால்பந்து ஆட்டத்தை ஆட ஆரம்பித்தேன். அப்போது இருந்து கால்பந்து ஆட்டம் மீது அப்படி ஒரு ஈர்ப்பு.

கால்பந்தாட்டம் என்றாலே அது ஆண்கள் விளையாட்டு என்ற தப்பான ஒரு அபிப்ராயம் இருந்துவருகிறது.
பவித்ரா, "உதய் அண்ணாவுக்குக் கண்டிப்பாக என்னை நினைவு இருக்கும் என்று நம்புகிறேன். அவர் 2020இல் அவர் பதவியிலிருந்தபோதே என் திறமையைக் கண்டுபிடித்து தயாளு அம்மையார் விருது கொடுத்துக் கவுரவித்தார். 25 ஆயிரம் பணமும் கொடுத்தார்.
அப்படி என்னை உற்சாகப்படுத்திய உதய் அண்ணா, இன்றைக்கு நான் விரும்பும் விளையாட்டுத்துறைக்கே அமைச்சராக வந்திருப்பது எங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கிறேன்.
முதன்முதலாக 6 ஆம் வகுப்பு படித்தபோது என்னுடைய கால் பந்து ஆட்டத்தைத் தொடங்கினேன். அப்பா, அம்மா இருவரும் டீக்கடை வைத்திருக்கிறார்கள். வீட்டில் பெரிய வசதி எல்லாம் இல்லை. வறுமையான வாழ்க்கைதான்.
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா வந்துவிட்டது. அதில் என் அப்பா இறந்துவிட்டார். அடுத்து என் பாட்டியும் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதன்பிறகு வாழ்க்கையையே மிகச் சோகமாக மாறிவிட்டது.
அந்தத் தருணத்தில் யாருமே உதவவில்லை. அப்போது உதய் அண்ணாதான் தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். 'நீ எப்படி இருக்கிறாய்? உன் குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள்?' என்று கருணையோடு விசாரித்ததோடு, உதவியும் செய்தார். என்னை மட்டும் அல்ல; எங்கள் டீமில் உள்ள அத்தனை வீராங்கனைகளையும் விசாரித்தார்.
அதன்பிறகுதான் உற்சாகம் வந்தது. திரும்ப விளையாட ஆரம்பித்தேன். அதையொட்டியே நேஷனல் லெவல் ஆட்டத்தில் கலந்துகொண்டோம். அதில் நாங்கள் 3வது பரிசை வென்றோம்.
அதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்து நபருக்கு தலா 1 லட்சம் வழங்கினார். அந்தநேரத்தில் எங்களுக்கு அது மிகப்பெரிய உதவியாக இருந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் அடுத்த தமிழ்நாடு டீம் வெற்றியோடுதான் திரும்பும் என வாக்கு கொடுத்திருந்தோம். அதைக் கட்டாயம் காப்பாற்றுவோம்" என்கிறார்.
இவர் என்னதான் தமிழ்நாடு கால்பந்தாட்ட அணியில் வீராங்கனையாக வலம் வந்தாலும் வீட்டில் இருக்கும்போது குடும்பத்திற்கு ஒத்தாசையாக ஆடு, மாடு மேய்க்கும் வேலைகளுக்கு உதவியாக இருந்துவருகிறார். அந்த அளவுக்கு எளிமையான வாழ்க்கை இவருடையது.
"இறுதி போட்டியில் எங்களுக்கு ஹரியானா டீமை சமாளிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஃபர்ஸ்ட் ஆப்- இல் நிறையவே கஷ்டப்பட்டோம். ஆனால், மனம் தளரவே இல்லை. செகண்ட் ஆஃப் இல் 2 கோல் போட்டு வெற்றி பெற்றோம். நாங்கள் முதல்வருக்கு வாக்குறுதி கொடுத்ததைப்போலவே வெற்றிக் கோப்பையோடு வந்திருக்கிறோம்" என்கிறார் வீராங்கனை தேவி.
"ஆயிரம் ரூபாய் என்பதே ஒரு குடும்பத்திற்கு மிகப் பெரிய விஷயமாக உள்ளது. அந்த நேரத்தில் ஒரு வீரருக்கு 1 லட்சம் கொடுத்து முதல்வர் ஸ்டாலின் உதவினார்.
இன்றைக்கும் இந்தியாவில் பெண்கள் அணி விளையாட்டைப் பொறுத்தளவில் 'சீனியர் உமென்'ஸ் நேஷனல் ஃபுட்பால் சாம்பியன்ஷிப்' தான். அதைத் தமிழ்நாடு அணி வென்றது மாபெரும் சாதனை" என்கிறார் அணியின் பயிற்சியாளர்.
வெற்றி பெற்ற அணியினர் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
-
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications