ஓட்டல் வேலை.. சாதித்த காளி- மல்லிகா.. தமிழகமே போற்றும் பழங்குடி பெண் நீதிபதி ஸ்ரீபதியின் பின்னணி
சென்னை: சென்னை: தமிழகமே போற்றும் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதியை படிக்க வைக்க அவரது பெற்றோர் பட்ட கஷ்டத்தை பார்க்கும் அசுரன் படத்தின் வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. நிலத்தை ஒரு காலத்தில் அரசே கையகப்படுத்தியது. பஞ்சம் பிழைக்க ஓட்டல் வேலைக்கு காளி- மல்லிகா தம்பதி ஸ்ரீபதியை சாதிக்க வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. இதில் ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் வெற்றி பெற்று நீதிபதியாகி உள்ளார். இவரை பற்றி நெகிழவைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அசுரன் படத்தில் வரும் வசனங்கள் அப்படியே ஸ்ரீபதிக்கு பொருந்தியுள்ளது..

யார் இந்த ஸ்ரீபதி: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில உள்ள கல்லாத்தூர் ஊராட்சி துரிஞ்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சு.காளி- மல்லிகா தம்பதியரின் மூத்த மகள் தான் ஸ்ரீபதி . இவருக்கு ஜெயசூர்யா என்ற தம்பியும், சரண்யா என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இதே பகுதியில் உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
நீதிபதி ஸ்ரீபதியின் தந்தைக்கு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் தற்போது குப்பநத்தம் அணை உள்ள இடத்தில் விவசாய நிலம் இருந்திருக்கிறது. குப்பநத்தம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது ஸ்ரீபதியின் தந்தை குடும்பத்தினரின் நிலத்தையும் அரசு கையகப்படுத்தி இருக்கிறது.
இதன் காரணமாக ஸ்ரீபதி குழந்தையாக இருக்கும்போதே, அவரது தாயார் மல்லிகாவின் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் குடும்பத்தினருடன் குடியேறியுள்ளார்கள்.. அங்கு ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றியபடி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்துள்ளனர்.
ஸ்ரீபதி ஏலகிரி மலையில் உள்ள சார்லஸ் மேல்நிலைப் பள்ளியில பள்ளிப்படிப்பு முடித்துள்ளார். தொடர்ந்து சட்ட படிப்பை தேர்வு செய்து டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடம் சட்டம் பயின்றார். தமிழ்வழி கல்வியில் படித்த இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
படிக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் நடைபெற்றது. இவரது கணவர் பெயர் வெங்கட்ராமன். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய உரிமையியல் நீதிபதி பணிக்கான தேர்வில் ஸ்ரீபதி பங்கேற்றார். தேர்வு தேதிக்கு 2 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இதனால், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தான் ஸ்ரீபதி தேர்வில் பங்கேற்றார். இந்த நிலையில், தேர்வு முடிவு அண்மையில் வெளியானது. இதில், ஸ்ரீபதி தேர்ச்சி பெற்று பழங்குடியின பெண் நீதிபதி என்ற பெருமையை வெறும் 23 வயதில் பெற்றுள்ளார்.
அசுரன் படத்தில் சொல்வது போல், காடு இருந்தா காட்டை பிடுங்கிக்குவாங்க.. வீடு இருந்தா வீட்டை பிடுங்கிக்குவாங்க.. ஆனால் படிப்பை மட்டும் உங்களிடம் பிடுங்க முடியாது... அதுதான் ஸ்ரீபதிக்கு நடந்துள்ளது. அவர் வறுமையிலும் கல்வியை சிறப்பாக கற்று நீதிபதியாகி பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். சொந்த ஊரை விட்டு ஏலகிரி வந்து ஓட்டலில் வேலை பார்த்து கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோரான காளி- மல்லிகா தம்பதிக்கு இதுதான் சிறந்த மகிழ்ச்சியாகும்.
நீதிபதி ஸ்ரீபதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நேற்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் "திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பெரிய வசதிகள் இல்லாத மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழகத்தில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்.
"நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தைதாய் மாரே, - நும்பெண்களைக் கற்கவைப் பீரே! இற்றைநாள் பெண்கல்வி யாலே, - முன்னேறவேண் டும்வைய மேலே!" என்று கூறியுள்ளார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications